தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக்படம் | ஐபிஎல்

ஆர்சிபி அணியின் பயிற்சியாளராக தினேஷ் கார்த்திக் நியமனம்!

ஐபிஎல் போட்டிகளில் இருந்து இந்தாண்டு ஓய்வை அறிவித்திருந்தார்.
Published on

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் ஆலோசகராகவும் அந்த அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பெங்களூரு அணிக்காக ஐபிஎல் தொடர்களில் விளையாடி வந்த நிலையில், இந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில், அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும், ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு ஐபிஎல் அணிகளுக்காக விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக், 2018 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com