
ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரின் முதல் 2 போட்டிகளில் சஞ்சு சாம்சன், ஷிவம் தூபே, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு பதிலாக இளம் வீரர்களான தமிழத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன், ஜிதேஷ் சர்மா, ஹார்ஸித் ராணா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வேக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் வருகிற ஜூலை 6 ஆம் தேதி ஹராரே மைதானத்தில் தொடங்குகிறது.
தூபே, சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால் ஆகியோர் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தனர். ஆனால், பார்படாஸில் ஏற்பட்ட கடும் சூறாவளி காரணமாக அவர்களால் இந்திய அணியுடன் இணைய முடியவில்லை.
இந்த மூன்று வீரர்களும் செவ்வாய்க்கிழமை தனி விமானம் மூலம் கிளம்பி புதன்கிழமை இந்தியா வரவுள்ளனர். பின்னர், பிரதமர் நரேந்திர மோடியின் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது, ரிங்கு சிங், டி20 உலகக் கோப்பைக்கான மாற்றுவீரர்களாக பார்படாஸில் உள்ளனர்.
ஐபிஎல் போட்டிகளில் அசத்திய தமிழகத்தைச் சேர்ந்த 22 வயதான சாய் சுதர்சன் குஜராத் டைடன்ஸ் அணிகாக விளையாடி வருகிறார். கடந்தாண்டு ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிராக சதம் விளாசினார். அவர் தற்போது லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் சர்ரே அணிக்காக கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். அவர் உடனடியாக ஹராரே புறப்பட்டுச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் 2 போட்டிகளில் விளையாடும் இந்தியா வீரர்களின் விவரம் வருமாறு:
சுப்மன் கில் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், துருவ் ஜூரேல் (விக்கெட் கீப்பர்), ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே, சாய் சுதர்சன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஹர்ஷித் ராணா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.