ஐசிசியின் ஜூன் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதை வென்ற ஜஸ்பிரித் பும்ரா!

ஐசிசியின் ஜூன் மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதினை இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வென்றுள்ளார்.
ஐசிசியின் ஜூன் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதை வென்ற ஜஸ்பிரித் பும்ரா!
படம் | ஐசிசி

ஐசிசியின் ஜூன் மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதினை இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வென்றுள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்றியது. டி20 தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட ஜஸ்பிரித் பும்ராவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

ஐசிசியின் ஜூன் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதை வென்ற ஜஸ்பிரித் பும்ரா!
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி விளையாட போவதில்லையா?

இந்த நிலையில், ஐசிசியின் ஜூன் மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதினை ஜஸ்பிரித் பும்ரா வென்றுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. ரோஹித் சர்மா, ரஹ்மனுல்லா குர்பாஸ் ஆகியோர் விருதுக்கான போட்டியில் இருந்தபோதிலும், அவர்களை பின்னுக்குத் தள்ளி விருதினை தட்டிச் சென்றுள்ளார் ஜஸ்பிரித் பும்ரா.

டி20 உலகக் கோப்பைத் தொடர் முழுவதும் ஜஸ்பிரித் பும்ரா அபாரமாக பந்துவீசினார். அவர் 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப்போட்டியிலும் அவர் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

ஐசிசி ஜூன் மாதத்துக்கான விருதினை வென்றது குறித்து ஜஸ்பிரித் பும்ரா பேசியதாவது: ஜூன் மாதத்துக்கான சிறந்த வீரராக நான் தேர்வு செய்யப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நினைவுகளை உருவாக்கி மகிழ்ச்சியாக கடந்து வந்த எனக்கு, இந்த விருதை மேலும் சிறப்பான கௌரவமாக கருதுகிறேன்.

ஐசிசியின் ஜூன் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதை வென்ற ஜஸ்பிரித் பும்ரா!
கதை முடியவில்லை..! சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட விருப்பம் தெரிவித்த வார்னர்!

கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும், ஆப்கானிஸ்தான் வீரர் குர்பாஸுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இந்த காலக்கட்டத்தில் சிறப்பாக செயல்பட்டார்கள். என்னை வெற்றியாளராக தேர்ந்தெடுத்ததை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன். எனது குடும்பத்தினர், பயிற்சியாளர் மற்றும் அணி வீரர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com