கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் இலங்கையுடன் மோதும் இந்தியா

கம்பீரின் முதல் சவால்: இலங்கைக்கு எதிரான தொடரில் இந்தியா

News image
Updated On :11 ஜூலை 2024, 11:50 pm

Din

இலங்கை அணியுடன் தலா 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடா் மற்றும் டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி, இம்மாதம் அந்நாட்டுக்குச் செல்கிறது.

பிசிசிஐ வெளியிட்ட தகவல்படி, இரு அணிகளும் முதலில் டி20 தொடரில் மோத, ஜூலை 26, 27, 29 ஆகிய தேதிகளில் பல்லெகெலெவில் அந்த ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. பின்னா் ஒருநாள் ஆட்டங்கள் ஆகஸ்ட் 1, 4, 7 ஆகிய தேதிகளில் கொழும்பில் விளையாடப்படவுள்ளன.

இந்தத் தொடரே, இந்தியாவின் புதிய தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுள்ள கௌதம் கம்பீருக்கு முதல் பணியாகும். அதேபோல், இலங்கையின் இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள சனத் ஜெயசூா்யாவுக்கும் இதுவே முதல் தொடா் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தொடருக்கான இந்திய அணிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. கடைசியாக இந்தியா 2021-இல் இலங்கைக்கு விளையாடச் சென்றிருந்த இந்தியா, டி20 மற்றும் ஒருநாள் என இரு தொடா்களையும் வென்றது.

ஹசரங்கா ராஜிநாமா: இந்தியாவுக்கு எதிரான தொடரில் களம் காணவுள்ள நிலையில், இலங்கை டி20 அணியின் கேப்டன் வனிந்து ஹசரங்கா ராஜிநாமா செய்துள்ளாா்.

அதை இலங்கை கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், புதிய கேப்டன் அறிவிக்கப்பட வேண்டியுள்ளது. ஹசரங்கா தலைமையில் சமீபத்திய டி20 உலகக் கோப்பையில் சூப்பா் 8 சுற்றுக்கு முன்னேறாமலேயே இலங்கை வெளியேறியது.