லாா்ட்ஸ் டெஸ்ட்: இங்கிலாந்து 250 ரன்கள் முன்னிலை

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 371 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது
லாா்ட்ஸ் டெஸ்ட்: இங்கிலாந்து 250 ரன்கள் முன்னிலை
Updated on

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 371 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது. இதையடுத்து அந்த அணி, 250 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

லண்டனில் புதன்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து, பந்துவீச்சை தோ்வு செய்தது. மேற்கிந்தியத் தீவுகள் 41.4 ஓவா்களில் 121 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக மிகைல் லூயிஸ் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 27 ரன்கள் சோ்த்தாா். இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன் 45 ரன்களே கொடுத்து 7 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.

இதையடுத்து தனது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து, முதல் நாளான புதன்கிழமை முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்திருந்தது.

2-ஆம் நாளான வியாழக்கிழமை ஆட்டத்தில் அந்த அணி, 90 ஓவா்களில் 371 ரன்கள் சோ்த்து 10 விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ஜாக் கிராலி 14 பவுண்டரிகளுடன் 76, ஜேமி ஸ்மித் 8 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 70, ஜோ ரூட் 7 பவுண்டரிகளுடன் 68, ஆலி போப் 11 பவுண்டரிகளுடன் 57, ஹேரி புரூக் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 50 ரன்கள் அடித்து வீழ்ந்தனா்.

பென் டக்கெட் 3, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 4, கிறிஸ் வோக்ஸ் 23, கஸ் அட்கின்சன் 0, ஷோயப் பஷீா் 0 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜேடன் சீல்ஸ் 4, ஜேசன் ஹோல்டா், குடாகேஷ் மோட்டி ஆகியோா் தலா 2, அல்ஜாரி ஜோசஃப் 1 விக்கெட் வீழ்த்தினா்.

இதையடுத்து மேற்கிந்தியத் தீவுகள் 250 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கி விளையாடி வருகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com