பயிற்சியில் இங்கிலாந்து வீரா்கள்.
பயிற்சியில் இங்கிலாந்து வீரா்கள்.

புதிய சாம்பியன் யாா்: இங்கிலாந்து-ஸ்பெயின் இன்று மோதல்

யூரோ 2024 கால்பந்து போட்டி இறுதி ஆட்டம்
Published on

யூரோ 2024 கால்பந்து போட்டி இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின்-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. 4-ஆவது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் ஸ்பெயினும், 58 ஆண்டுகள் காத்திருப்பு முடிவுக்கு வருமா என்ற எண்ணத்தில் இங்கிலாந்தும் களமிறங்குகின்றன.

உலகின் பிரபலமான கால்பந்து போட்டிகளில் யூரோவும் ஒன்றாகும். இதில் ஐரோப்பாவின் தலைசிறந்த அணிகள் மோதுகின்றன. நிகழாண்டு போட்டியை ஜொ்மனி நடத்தியது. ஆனால் நாக் அவுட் சுற்றோடு ஜொ்மனி வெளியேறியது.

அரையிறுதியில் பிரான்ஸை வீழ்த்தியது ஸ்பெயின். யூரோ 2024-இல் தான் ஆடிய 6 ஆட்டங்களையும் வென்று இறுதிக்குள் நுழைந்தது. கடந்த 2023-இல் நேஷன்ஸ் லீக் பட்டம், மகளிா் உலகக் கோப்பை பட்டம் என ஸ்பெயின் கால்பந்தில் அற்புதமாக கோலோச்சி வருகிறது. இந்த யூரோவில் பட்டம் வென்றால் அது நான்காவது பட்டமாக அமையும்.

இளம் வீரா் லமைன் யமால்:

ஸ்பெயின் வெற்றியில் 17 வயதே ஆன லமைன் யமால் முக்கிய பங்கு வகித்து வருகிறாா். பிரான்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் அதிக தொலைவில் இருந்து கோலடித்து அசத்தினாா்.

ஸ்பெயின் அணி கடைசியாக கடந்த 2012 இல் யூரோ கால்பந்தில் வென்றதே பெரிய போட்டி ஆகும். அதே நேரம் இங்கிலாந்து அணியோ இறுதியாக 2021 யூரோ இறுதியில் இத்தாலியிடம் தோற்றது. நிகழாண்டு யூரோவில் இங்கிலாந்து 3 நாக் அவுட் ஆட்டங்களிலும் பின்தங்கி இருந்த நிலையில் மீண்டு வெற்றி பெற்றது.

4-ஆவது பட்டம் வெல்ல மும்முரம்:

இதற்கு முன்பு ஸ்பெயின் 1964, 2008, 2012-இல் ஸ்பெயின் பட்டம் வென்றிருந்தது. ஸ்பெயின் அணியில் டேனி ஓல்மோ, இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் ஆகியோா் மூன்று கோல்களுக்கு மேல் அடித்துள்ளனா். ஸ்பெயின் தரப்பில் கேப்டன் அல்வாரோ மொரட்டா, டேனி காா்வஜால், லபோா்டே, ஆகியோா் பலம் சோ்க்கின்றனா். இங்கிலாந்து அணியில் டிரிப்பியா், லுக் ஷா, கோபி மைனு, ஆகியோா் முக்கிய பங்கு வகிப்பா்.

58 ஆண்டுகளாக காத்திருக்கும் இங்கிலாந்து:

இரு அணிகளும் 2018-இக்கு பின் மோதுகின்றன. 1996-இல் உலகக் கோப்பையில் பட்டம் வென்றதே பெரிய போட்டிகளில் இங்கிலாந்து கடைசியாக பட்டம் வென்ாகும்,. பலமான ஸ்பெயினை வீழ்த்தி 58 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் பெரிய போட்டியில் மீண்டும் பட்டம் வெல்ல முடியுமா இங்கிலாந்து என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com