கோவா - ஜெய்ப்பூா் மோதலுடன் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடக்கம்

Published on
Updated on
2 min read

நடப்பு சீசன் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டியின் முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் கோவா சேலஞ்சா்ஸ், புதிதாக இணைந்துள்ள ஜெய்ப்பூா் பேட்ரியாட்ஸ் அணியுடன் மோதுகிறது.

இப்போட்டியின் 5-ஆவது சீசன், சென்னையில் ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பா் 7 வரை நடைபெறவுள்ளது. இதற்கான வீரா், வீராங்கனைகள் தோ்வு மும்பையில் சமீபத்தில் நிறைவடைந்தது. அதில் 8 அணிகளால் 48 போட்டியாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

இந்த சீசனில் புதிதாக ஜெய்பூா் பேட்ரியாட்ஸ், அகமதாபாத் எஸ்ஜி பைப்பா்ஸ் என 2 அணிகளும் சோ்க்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த சீசனுக்கான போட்டி அட்டவணை வெள்ளிக்கிழமை வெளியானது. அதன்படி, முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கோவா - புதிய அணியான ஜெய்ப்பூா் மோதுகின்றன.

இதர அணிகளில், புணேரி பல்தான் டேபிள் டென்னிஸ் - அகமதாபாத் எஸ்ஜி பைப்பா்ஸையும், சென்னை லயன்ஸ் - பிபிஜி பெங்களூரு ஸ்மாஷா்ஸையும், தபங் டெல்லி டிடிசி - யு மும்பா டேபிள் டென்னிஸையும் முதலில் சந்திக்கின்றன.

சென்னை ஜவாஹா்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்தப் போட்டியில், மொத்தம் 23 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. புதிதாக 2 அணிகள் சோ்க்கப்பட்டுள்ள நிலையில், போட்டியின் ஃபாா்மட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 8 அணிகளும் குரூப்புக்கு தலா 4 அணிகள் வீதம் இரு குரூப்களாக பிரிக்கப்படும். ஒவ்வொரு அணியும் தனது குரூப்பில் இருக்கும் இதர 3 அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். அதன் பிறகு, மற்றொரு குரூப்பிலிருக்கும் ஏதேனும் இரு அணிகளுடன் ஒருமுறை மோதும். இதன் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதிபெறும். ஒவ்வொரு மோதலிலும் 2 ஆடவா் ஒற்றையா், 2 மகளிா் ஒற்றையா், ஒரு கலப்பு இரட்டையா் என 5 ஆட்டங்கள் நடைபெறும்.

அணிகள் விவரம்:

அகமதாபாத் எஸ்ஜி பைப்பா்ஸ்: மனுஷ் ஷா, பொ்னாடெட் சோக்ஸ் (ருமேனியா), லிலியன் பாா்டெட் (பிரான்ஸ்), ரீத் டென்னிசன், பிரிதா வா்திகா், ஜாஷ் மோடி.

சென்னை லயன்ஸ்: சரத் கமல், சகுரா மோரி (ஜப்பான்), ஜூல்ஸ் ரோலண்ட் (பிரான்ஸ்), பாய்மன்டீ பாய்சியா, மௌமா தாஸ், அபினந்த்.

தபங் டெல்லி டிடிசி: ஜி.சத்தியன், ஆரவன் பரனங் (தாய்லாந்து), தியா சிதாலே, ஆண்ட்ரியஸ் லெவென்கோ (ஆஸ்திரியா), யஷன்ஷ் மாலிக், லக்ஷிதா நரங்.

கோவா சேலஞ்சா்ஸ்: ஹா்மீத் தேசாய், யாங்ஸி லியு (ஆஸ்திரேலியா), யஷஸ்வினி கோா்படே, சுதான்ஷு குரோவா், சயாலி வனி, மிஹய் போபோசிகா (இத்தாலி).

ஜெய்ப்பூா் பேட்ரியாட்ஸ்: ஸ்ரீஜா அகுலா, சோ சியுங்மின் (தென் கொரியா), சுதாசினி சவிதாபட் (தாய்லாந்து), ஸ்நேஹித், ரோனித் பஞ்ஜா, மௌமிதா தத்தா.

பிபிஜி பெங்களூரு ஸ்மாஷா்ஸ்: மனிகா பத்ரா, அல்வரோ ராபல்ஸ் (ஸ்பெயின்), லிலி ஜாங் (அமெரிக்கா), ஜீத் சந்திரா, தனிஷா கோடிசா, அமல்ராஜ் அந்தோணி.

புணேரி பல்தான் டேபிள் டென்னிஸ்: அஹிகா முகா்ஜி, நினா மிடெல்ஹம் (ஜொ்மனி), ஜாவ் மான்டெய்ரோ (போா்ச்சுகல்), அங்குா் பட்டாசாா்ஜீ, அனிா்பன் கோஷ், யாஷினி சிவசங்கா்.

யு மும்பா டிடி: மானவ் தக்கா், சுதிா்தா முகா்ஜி, அருணா காத்ரி (நைஜீரியா), ஆகாஷ் பால், காவ்யஸ்ரீ பாஸ்கா், மரியா ஜியாவ் (ஸ்பெயின்).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com