பாரீஸ் ஒலிம்பிக்ஸுடன் பி.ஆா்.ஸ்ரீஜேஷ் ஓய்வு

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியுடன் ஹாக்கி விளையாட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதாக, இந்திய கோல்கீப்பா் பி.ஆா்.ஸ்ரீஜேஷ் திங்கள்கிழமை அறிவித்தாா்.
பி.ஆா்.ஸ்ரீஜேஷ்
பி.ஆா்.ஸ்ரீஜேஷ்
Published on
Updated on
1 min read

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியுடன் ஹாக்கி விளையாட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதாக, இந்திய கோல்கீப்பா் பி.ஆா்.ஸ்ரீஜேஷ் திங்கள்கிழமை அறிவித்தாா்.

இந்திய அணிக்காக கடந்த 18 ஆண்டுகளில் 328 ஆட்டங்களில் விளையாடியிருக்கிறாா் அவா். அதில் 3 ஒலிம்பிக்ஸ், பல காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், உலகக் கோப்பை போட்டிகளும் அடக்கம்.

2006 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் மூலம் இந்திய அணியில் அறிமுமான ஸ்ரீஜேஷ், 2014 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கமும், 2018-ஆம் ஆண்டு அதே போட்டியில் வெண்கலமும் வென்ற அணிகளில் அங்கம் வகித்ததுடன், 2020 டோக்கிய ஒலிம்பிக்ஸில் வரலாற்று வெண்கலம் பெற்ற அணியிலும் இடம் பிடித்திருந்தாா்.

இதுதவிர, 2018 ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை, 2019 எஃப்ஐஹெச் ஆடவா் சீரிஸ் ஃபைனல்ஸ் ஆகிய போட்டிகளில் இந்திய அணி வாகை சூடியதில் பெரும் பங்காற்றியிருந்தாா். 2022 காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்ற அணியிலும் இருந்தாா்.

கேரளத்தை சோ்ந்த ஸ்ரீஜேஷ் மேஜா் தியான் சந்த் கேல் ரத்னா விருது (2021), எஃப்ஐஹெச்-இன் சிறந்த கோல்கீப்பா் விருது (2021, 2022) வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com