ரியல் மாட்ரிட்: அதிக வருமானம் ஈட்டும் கால்பந்து அணியாக புதிய சாதனை!

பிரபல கால்பந்து அணியான ரியல் மாட்ரிட் 1 பில்லியன் யூரோ வருமானம் ஈட்டிய முதல் கால்பந்து கிளப் அணியாக சாதனை படைத்துள்ளது.
1 பில்லியன் யூரோ வருமானம் ஈட்டிய முதல் கால்பந்து அணியாக ரியல் மாட்ரிட் சாதனை.
1 பில்லியன் யூரோ வருமானம் ஈட்டிய முதல் கால்பந்து அணியாக ரியல் மாட்ரிட் சாதனை. படங்கள்: ரியல் மாட்ரிட் / எக்ஸ்
Published on
Updated on
1 min read

பிரபல கால்பந்து அணியான ரியல் மாட்ரிட் அணியின் 2023/2024 நிதியாண்டின் வருமானம் குறித்து கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) நடைபெற்றது. இதில் வீரர்களுக்கான மாற்றங்கள் இல்லாமலேயே 1.073 பில்லியன் யூரோஸ் ( இந்திய மதிப்பில் 9,076 கோடி 10 லட்சம் ரூபாய்) வருமானம் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 27 சதவிகிதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல் மாட்ரிட் அணியில் வலைதளத்தில், “2023-2024 நிதியாண்டில் மட்டும் 1,073 மில்லியன் யூரோஸ் வருமானம கிடைத்துள்ளது. இது 2022-2023 நிதியாணடைவிட 27 சதவிகிதம் (230 மில்லியன் யூரோஸ்) அதிகம். இந்த நிதியாண்டில் விளையாட்டரங்கம் முழுமையாக செயல்படாவிட்டாலும் நமது அணி 1 பில்லியன் யூரோஸை எட்டியுள்ளது. வேறெந்த கால்பந்து கிளப் அணியும் எட்டாத சாதனை இது” எனக் குறிப்பிட்டுள்ளது.

1 பில்லியன் யூரோ வருமானம் ஈட்டிய முதல் கால்பந்து அணியாக ரியல் மாட்ரிட் சாதனை.
ஒரே நாளில் 500-600 ரன்கள் அடிப்போம்..! இங்கிலாந்து வீரர் நம்பிக்கை!

ரியல் மாட்ரிட் அணி வரி, சமூக பாதுகாப்பு திட்டங்களுக்குக்காக 2023-2024 நிதியாண்டில் 277.1 மில்லியன் யூரோஸ் ( இந்திய மதிப்பில் 2515 கோடி ரூபாய்) பங்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2014-2024 வருடங்களில் மட்டும் ரியல் மாட்ரிட் அணி 6 முறை சாம்யியன் லீக் பட்டத்தையும் ஸ்பேனிஷ் லீக், சூப்பர் கப் பட்டங்களையும் வென்றுள்ளது. சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் 2-0 கோல் கணக்கில் போருசியா டாா்ட்மண்ட் அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

ரியல் மாட்ரிட்
ரியல் மாட்ரிட்

இதன் மூலம், போட்டியிலேயே அதிக முறை சாம்பியனான அணியாக நீடிக்கும் ரியல் மாட்ரிட், அந்த எண்ணிக்கையை தற்போது 15-ஆக அதிகரித்துக்கொண்டுள்ளது.

1 பில்லியன் யூரோ வருமானம் ஈட்டிய முதல் கால்பந்து அணியாக ரியல் மாட்ரிட் சாதனை.
கிரிக்கெட்தான் கடவுள்..! மகளிரணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் நெகிழ்ச்சி!

பிரபல கால்பந்து விரர் லூகா மோட்ரிச் 2025 வரை ரியல் மாட்ரிட் அணியில் விளையாட ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரபல இளம் வீரர் எம்பாப்வேயும் இந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளது அந்த அணிக்கு மேலும் பலத்தை சேர்த்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com