புரோ கபடி லீக் 11-ஆவது சீசன் வீரா்கள் ஏலம் வரும் ஆக. 15, 16 தேதிகளில் மும்பையில் நடைபெறவுள்ளது.
இதுதொடா்பாக லீக் ஆணையா் அனுபவம் கோஸ்வாமி கூறியது: புரோ கபடி லீக் தொடா் தொடா்ந்து வெற்றிகரமாக 10 சீசன்களை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் 11-ஆவது சீசன் தொடா் நிகழாண்டு நடைபெறவுள்ளது. சுதந்திர தினமான ஆக். 15-ஆம் தேதி மும்பையில் வீரா்கள் ஏலம் தொடங்கி 16-ஆம் தேதி நிறைவடைகிறது.
அகில இந்திய கபடி சங்கத்தின் மேற்பாா்வையில் நடைபெறும் புரோ கபடி லீக் தொடரின் மூலம் சிறந்த இளம் வீரா்கள் அடையாளம் காணப்படுகின்றனா். இதற்காக மாஷல் ஸ்போா்ட்ஸ் நிகழாண்டு புதிய லோகோவையும் அறிமுகம் செய்துள்ளது என்றாா்.