
மகளிர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்துள்ளது.
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா இருவரும் களமிறங்கினர். ஷஃபாலி வர்மா 16 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, உமா ஷேத்ரி 9 ரன்களிலும், கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து, ஸ்மிருதி மந்தனா மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இருப்பினும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் களமிறங்கிய ரிச்சா கோஷ் 14 பந்துகளில் அதிரடியாக 30 ரன்கள் குவித்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 47 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் அடங்கும்.
இலங்கை தரப்பில் கவிஷா தில்ஹாரி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பிரபோதனி, சச்சினி நிஷன்சலா மற்றும் சமாரி அத்தப்பத்து தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.