
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான பயிற்சியை ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தொடங்கியுள்ளனர்.
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இலங்கைக்கு எதிரான டி20 தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறுகிறது. ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் தொடங்குகிறது.
இந்த நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் இந்திய வீரர்கள் சிலர் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான பயிற்சியைத் தொடங்கியுள்ளனர்.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு ஓய்விலிருந்து வந்த ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் கிரிக்கெட் பயிற்சிக்கு திரும்பியுள்ளனர். ஒருநாள் தொடரில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் இடம்பெற்றுள்ளார். அவர் கடைசியாக கடந்த ஆண்டு இறுதியில் ஒருநாள் போட்டியில் விளையாடி இருந்தார். இவர்களுடன் ஹர்ஷித் ராணாவும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 2 ஆம் தேதி நடைபெறுகிறது. 2-வது ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 4 ஆம் தேதியும், 3-வது ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 7 ஆம் தேதியும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.