
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜூலை 30) அறிவித்துள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜூலை 30) அறிவித்துள்ளது. இலங்கை அணிக்கு சரித் அசலங்கா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி விவரம்
சரித் அசலங்கா (கேப்டன்), பதும் நிசங்கா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், சதீரா சமரவிக்கிரம, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியாநாகே, நிஷான் மதுஷ்கா, வனிந்து ஹசரங்கா, துனித் வெல்லாலகே, சமிகா கருணாரத்னே, மஹீஷ் தீக்ஷனா, அகிலா தன்ஞ்ஜெயா, தில்ஷன் மதுஷங்கா, மதீஷா பதிரானா மற்றும் அஷிதா ஃபெர்னாண்டோ.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.