
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருடன் இந்திய தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட்டின் பதவிக் காலம் நிறைவடையவுள்ளது. இதனால் புதிய தலைமைப் பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகளை பிசிசிஐ மேற்கொண்டு வருகின்றது.
கூகுள் விண்ணப்பங்கள் மூலம் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று மே 13-ஆம் தேதி பிசிசிஐ தெரிவித்திருந்தது. மே 27ஆம் தேதி வரை விண்ணப்பத்துக்கான காலஅவகாசம் நிறைவடைந்த நிலையில், மொத்தம் 3,000-க்கும் அதிகமானோர் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியது.
வெளிநாட்டு பயிற்சியாளர்களான ஜஸ்டின் லாங்கர், ரிக்கி பாண்டிங் ஆகியோரிடம் இது குறித்து பிசிசிஐ அணுகியதாகவும் அவர்கள் மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
பின்னர் கௌதம் கம்பீர் தேர்வு செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகின. இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில் கங்குலி பேசியதாவது:
வெளிநாட்டு பயிற்சியாளர்களைவிட இந்தியர்கள் யாராவது தேர்வு செய்தால் நன்றாக இருக்கும். ஏனெனில் இந்தியாவில் அபரிமிதமான திறமைசாலிகள் பலர் இருக்கின்றனர். திராவிட்டுக்குப் பதிலாக கம்பீர் தேர்வானால் நன்றாகத்தான் இருக்கும்.
கம்பீர் விண்ணப்பதாரா தெரியவில்லை. அவர் விண்ணப்பித்தால் மட்டுமே வேலை கிடைக்கும். மே.27ஆம் தேதிதான் விண்ணப்பிக்க கடைசிநாள். ஆனால் பிசிசிஐ இதனை நீட்டித்திருக்கலாம். கம்பீர் விண்ணப்பித்து இருந்தால் அவர் நல்ல பயிற்சியாளராக இருப்பார்.
கேகேஆர் அணிக்காக கம்பீர் சிறப்பாக செயல்பட்டதை தொலைக் காட்சிகளில் பார்க்கிறோம். போட்டியில் வெல்ல வேண்டுமென்ற பசி, ஆர்வம் அனைத்தும் கம்பீரிடம் இருக்கிறது. கம்பீர் விண்ணப்பித்து பிசிசிஐ தேர்வாணயம் அவரை தேர்வு செய்தால் மகிழ்ச்சி. அவர் பொருத்தமான தேர்வாக அமைவார் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.