பயிற்சி ஆட்டம்: ரிஷப் பந்த் அரைசதம்

பயிற்சி ஆட்டம்: ரிஷப் பந்த் அரைசதம்
Published on
Updated on
1 min read

வங்க தேச அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 182 ரன்கள் குவித்தது.

அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் டி20 உலகக் கோப்பை தொடர் ஜூன் 1-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. முதல்முறையாக 20 அணிகள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளன.

தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தியா தனது முதல் பயிற்சி ஆட்டத்தினை வங்கதேசத்துடன் மோதுகிறது.

இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு போட்டி தொடங்கியது. அதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. சிறப்பாக விளையாடிய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக ரிஷப் பந்த் அரைசதம் விளாசினார். அவர் 32 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார்.

சர்வதேசப் போட்டியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு விளையாடும் ரிஷப் பந்த் 4 பவுண்டரி 4 சிக்ஸருடன் அரைசதம் விளாசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com