கார்ல்செனுடன் போராடி தோற்ற பிரக்ஞானந்தா! முதலிடம் பிடிக்க என்ன செய்ய வேண்டும்?

நார்வே செஸ் போட்டியில் மிகவும் எதிர்பார்த்த போட்டியில் பிரக்ஞானந்தா தோல்வியுற்றார்.
கார்ல்செனுடன் போராடி தோற்ற பிரக்ஞானந்தா! முதலிடம் பிடிக்க என்ன செய்ய வேண்டும்?
படம்: நார்வே செஸ்
Updated on
1 min read

நார்வே செஸ் போட்டியில் 8ஆவது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சென் உடன் மோதினார். கிளாசிக்கல் போட்டியில் டிரா ஆனதால் போட்டி ஆர்மகெடான் கட்டத்துக்கு சென்றது. இதில் கார்ல்சென் வென்றார்.

முன்னதாக கிளாசிக்கல் கேமில் கார்ல்சென்னை பிரக்ஞானந்தா வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தப் போட்டியில் தோற்றாலும் ஆர்மகெடான் வரை சென்றதால் பிரக்ஞானந்தாவுக்கு ஒரு புள்ளியும் வெற்றி பெற்ற கார்ல்சென்னுக்கு 1.5 புள்ளியும் கிடைத்தது.

கார்ல்செனுடன் போராடி தோற்ற பிரக்ஞானந்தா! முதலிடம் பிடிக்க என்ன செய்ய வேண்டும்?
வெற்றியுடன் தொடங்கியது ஆப்கானிஸ்தான்

இந்தப் போட்டிக்கு முடிவில் புள்ளிப் பட்டியலில் கார்ல்சென் முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.

8ஆவது சுற்று முடிவில் புள்ளிப் பட்டியல்:

1, கார்ல்சென் - 14.5 புள்ளிகள்

2. ஹிகரு நகமுரா - 13.5 புள்ளிகள்

3. பிரக்ஞானந்தா - 12 புள்ளிகள்

4. பிரோஜா - 11 புள்ளிகள்

5.பேபியானோ கரானா - 9 புள்ளிகள்

6. டிங் லிரென் - 4.5 புள்ளிகள்

மகளிர் பிரிவில் வைஷாலி முஸிஷுக்கை கிளாசிக்கில் கேமில் டிரா செய்து ஆர்மகெடானில் வென்றார். மகளிர் புள்ளிப் பட்டியலில் வென்ஜுன் முதலிடத்திலும் வைஷாலி 3ஆவது இடத்திலும் இருக்கிறார்கள்.

1.வென்ஜுன் -14.5 14.5 புள்ளிகள்

2. முஸிஷுக் - 13 புள்ளிகள்

3. வைஷாலி - 11.5 புள்ளிகள்

4.டிங்ஜி - 11.5 புள்ளிகள்

கடைசி 2 போட்டியில் பிரக்ஞானந்தா ஃபாபியோனா பேபியானோ கரானா, ஹிகரு நகமுராவுடன் மோதவிருக்கிறார். இதில் கிளாசிக்கல் கேமில் வென்று கார்ல்சென், ஹிகரு நகமுரா தோல்வியுற்றால் பிரக்ஞானந்தா முதலிடம் பிடிக்க வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com