தோனியின் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சாதனையை தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மா முறியடித்தார்.
டி20 உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள இந்திய அணி, நேற்று அயர்லாந்துக்கு எதிராக விளையாடிய முதல் போட்டியில் அபார வெற்றியை பதிவு செய்தது.
முதலில் அயா்லாந்து 16 ஓவா்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்களே சோ்க்க, இந்தியா 12.2 ஓவா்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்கள் எடுத்து வென்றது. இந்த ஆட்டத்தில் இந்திய தரப்பில் ஹா்திக் பாண்டியா, ஜஸ்பிரீத் பும்ரா, அா்ஷ்தீப் சிங் ஆகியோா் பௌலிங்கில் அசத்த, பேட்டிங்கில் கேப்டன் ரோஹித் சா்மா, ரிஷப் பந்த் சிறப்பாக செயல்பட்டனா்.
இந்த வெற்றியின் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக போட்டிகளில் வெற்றி பெற்று கொடுத்த இந்திய கேப்டன் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார்.
இந்திய டி20 அணியின் கேப்டனாக 55 போட்டிகளில் விளையாடி 42 வெற்றிகளை ரோஹித் சர்மா பதிவு செய்துள்ளார். இந்த தொடரில் இந்திய அணி, ரோஹித் தலைமையில் இன்னும் பல போட்டிகளில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக முன்னாள் கேப்டன் தோனி, 72 போட்டிகளில் 41 வெற்றிகளை இந்திய அணிக்கு பெற்றுக் கொடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.