
ஜிம்பாப்வே அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஜஸ்டின் சம்மன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜிம்பாப்வே அணி டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு தகுதி பெறாததையடுத்து, அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த டேவ் ஹௌடான், பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார். அதன்பின், ஜிம்பாப்வே அணிக்கான புதிய தலைமைப் பயிற்சியாளராக ஜஸ்டின் சம்மன்ஸ் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஜஸ்டின் சம்மன்ஸ் அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்துள்ளார். ஜிம்பாப்வே அணி அதன் சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த டி20 தொடரிலிருந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஜஸ்டின் சம்மன்ஸ் செயல்படவுள்ளார்.
ஜிம்பாப்வே அணியின் முன்னாள் பேட்ஸ்மேனான டியான் இப்ராஹிம், அணியின் உதவிப்பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜிம்பாப்வே அணிக்காக கடந்த 2001 மற்றும் 2005 ஆம் ஆண்டு இடைவெளியில் டியான் இப்ராஹிம் 29 டெஸ்ட் மற்றும் 82 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் குழுவிலும் பணியாற்றியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.