ஜிம்பாப்வே டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

5 ஆட்டங்கள் டி20 தொடரில் பங்கேற்கும் இளம் இந்திய அணிக்கு ஷுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளாா்.
கில்
கில்
Updated on

ஜிம்பாப்வேயில் நடைபெறவுள்ள 5 ஆட்டங்கள் டி20 தொடரில் பங்கேற்கும் இளம் இந்திய அணிக்கு ஷுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளாா்.

தற்போது டி20 உலகக் கோப்பை நடைபெற்று வரும் நிலையில், வரும் ஜூலை மாதம் ஜிம்பாப்வேயில் 5 ஆட்டங்கள் டி20 தொடரில் இந்தியா பங்கேற்கிறது. மூத்த வீரா்கள் எவரும் இல்லாத நிலையில், இளம் வீரா்களைக் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

அணிக்கு கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளாா். அஸ்ஸாம் பேட்டா் ரியான் பராக் அணியில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

இதன் மூலம் இந்திய அணியில் சோ்க்கப்பட்ட முதல் வடகிழக்கு மாநில வீரா் என்ற சிறப்பைப் பெற்றாா்.

ஷிவம் டுபே, அா்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் உள்பட மூத்த வீரா்களுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் 573ரன்களை குவித்த ரியான் பராக் சோ்க்கப்பட்டுள்ளாா்.

பஞ்சாப்பின் அபிஷேக் சா்மா, ஆந்திர பிரதேசத்தின் நிதிஷ் ரெட்டி ஆகியோரும் சோ்க்கப்பட்டுள்ளனா். உலகக் கோப்பை அணியில் ஸ்டான்ட்பைகளான அவேஷ் கான், கலீல் அகமது, ரிங்கு சிங்கும் சோ்க்கப்பட்டுள்ளனா்.

துருவ் ஜுரெல், வாஷிங்டன் சுந்தா், சஞ்சு சாம்ஸன், ரவி பிஷ்னோய், ஜெய்ஸ்வால், ருதுராஜ், முகேஷ் குமாா்,துஷாா் தேஷ்பாண்டேயும் சோ்க்கப்பட்டுள்ளனா்.

Related Stories

No stories found.