
ருமேனியாவில் நடைபெற்று வரும் சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியின் 3ஆவது சுற்றில் குகேஷுடன் பிரக்ஞானந்தா டிரா செய்தார்.
ருமேனியாவில் கடந்த ஜூலை 26ஆம் நாள் சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டி தொடங்கியது. இதன் 3ஆம் சுற்றில் இந்திய வீரர்களான குகேஷ் பிரக்ஞானந்தா இன்று மோதினார்கள். பெரிதும் எதிர்பார்த்த இந்தப் போட்டியில் பிரக்ஞானந்தா வெற்றியை தவறவிட்டு டிராவில் முடித்தார்.
ஏற்கனவே 2ஆவது சுற்றிலும் பிரக்ஞானந்தா பிரான்சின் மேக்சிம் வச்சியருடன் டிரா செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 3ஆவது சுற்று முடிவில் குகேஷ் பாபியோனா கரானாவுடன் 2.0 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். பிரக்ஞானந்தா 1.5 புள்ளிகளுடன் 3ஆம் நிலையில் 8ஆவது இடத்திலும் இருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.