டி20 போட்டி: ரோஹித் சர்மா, விராட் கோலி ஓய்வு!

டி20 உலகக் கோப்பை வென்ற நிலையில், இருவரும் ஓய்வு அறிவிப்பு.
விராட் கோலி, ரோஹித் சர்மா
விராட் கோலி, ரோஹித் சர்மாRicardo Mazalan
Updated on
1 min read

சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி அறிவித்தனர்.

டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 59 பந்துகளில் 76 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட விராட் கோலி விருதை பெற்ற பிறகு பேசுகையில், எதை அடைய வேண்டும் என நினைத்தோமோ அதை அடைந்துள்ளோம். இதுவே எனது கடைசி டி20 உலகக் கோப்பை என்றாா்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் ரோஹித் சர்மா, இந்திய அணிக்காக எனது கடைசி டி20 போட்டி இதுதான். இந்தியாவுக்காக கோப்பையை வென்றுவிட்டு ஓய்வை தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தேன். தற்போது வென்றுவிட்டேன். குட்பை சொல்லும் நேரம் இது. ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் எனத் தெரிவித்தார்.

மேலும், இருவரும் தொடர்ந்து ஐபிஎல் டி20 போட்டிகளில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விராட் கோலி, ரோஹித் சர்மா
சாம்பியன் இந்தியா! கடைசி ஓவரில் த்ரில் வெற்றி!

டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை கடைசி ஓவரில் வீழ்த்திய இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com