
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற 258 ரன்கள் தேவை.
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ஆஸி. 3-0 என அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து நியூசி. உடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி பிப்.29ஆம் தேதி வெலிங்டனில் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டிம் சௌதி பௌலிங்கை தேர்வு செய்தார்.
முதல் இன்னிங்ஸில் ஆஸி. 383 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆட்டமிழக்காமல் 174* ரன்கள் எடுத்து, தனியொருவனாக ஆஸி. அணியை தூக்கி நிறுத்தினார் கேமரூன் கிரீன். அடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி 43.1 ஓவர்களில் 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக க்ளென் பிலிப்ஸ் 71 ரன்களும் மாட் ஹென்றி 42 ரன்களும் எடுத்தனர்.
2வது இன்னிங்ஸில் ஆஸி. அணி மோசமாக விளையாடியது. 51.1 ஓவரில் 164 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக பந்து வீச்சாளர் நேதன் லயன் 41 ரன்கள் எடுத்தார். பேட்டர்கள் மோசமாக விளையாடினார்கள்.
369 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 3ஆம் நாள் முடிவில் 41 ஓவர்களுக்கு 111/3 ரன்கள் எடுத்துள்ளது. ரச்சின் ரவீந்திரா 56* ரன்களுடனும் டேரில் மிட்செல் 12* ரன்களுடனும் களத்தில் இருக்கிறார்கள்.
இரண்டு நாள்கள் மீதமிருக்கின்றன. நியூசிலாந்து வெற்றிபெற இன்னும் 258 ரன்கள் தேவை. ஆஸி. வெற்றி பெற 7 விக்கெட்டுகள் தேவை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.