லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் இணையும் பிரபல பயிற்சியாளர்!

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு லான்ஸ் குளுஸ்னர் உதவிப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் இணையும் பிரபல பயிற்சியாளர்!

அலக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு லான்ஸ் குளுஸ்னர் உதவிப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்குவற்கு இன்னும் ஓரிரு வாரங்களே உள்ளன. ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூவை எதிர்கொள்கிறது.

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் இணையும் பிரபல பயிற்சியாளர்!
ஐபிஎல் தொடருக்கான பயிற்சியைத் தொடங்கிய சிஎஸ்கே; தோனி எப்போது வருவார்?

ஐபிஎல் தொடரில் கடந்த 2022 ஆம் ஆண்டு அறிமுகமான லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் கடந்த இரண்டு சீசன்களிலுமே பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றன. இந்த முறையும் அதே உத்வேகத்துடன் லக்னௌ அணி களம் காண உள்ளது.

இந்த நிலையில், லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு லான்ஸ் குளுஸ்னர் உதவிப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

லக்னௌ அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் செயல்பட்டு வரும் நிலையில், அவருடன் உதவிப் பயிற்சியாளராக குளுஸ்னர் இணைந்துள்ளார்.

லான்ஸ் குளுஸ்னர்

முன்னாள் தென்னாப்பிரிக்க ஆட்டக்காரர். 52 வயதாகும் இவர் சர்வதேசப் போட்டிகளில் பல நாடுகளுக்கு தலைமைப் பயிற்சியாளராக இருந்துள்ளார். உள்ளூர் போட்டிகளில் டெல்லி மற்றும் திரிபுரா அணிகளுக்கு ஆலோசகராகவும் இருந்து வருகிறார். டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியிலும் பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார்.

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் இணையும் பிரபல பயிற்சியாளர்!
அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆப்கன் அணி அறிவிப்பு!

கடந்த ஆண்டு கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட இவர் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக இருந்தார். சர்வதேச அரங்கில் தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com