தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

ஐபிஎல் தொடருக்கான பயிற்சியைத் தொடங்கிய சிஎஸ்கே; தோனி எப்போது வருவார்?

இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான பயிற்சியை சென்னை சூப்பர் கிங்ஸ் தொடங்கியுள்ளது.

News image
Updated On :2 மார்ச் 2024, 4:10 pm IST

இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான பயிற்சியை சென்னை சூப்பர் கிங்ஸ் தொடங்கியுள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 முதல் தொடங்கவுள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் போட்டிகள் தொடங்கவிருக்கும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பயிற்சியைத் தொடங்குவதற்காக சென்னைக்கு வருகை புரிந்துள்ளனர்.

முதல் கட்டமாக சென்னை அணியின் தீபக் சஹார், சிமர்ஜித் சிங், ராஜவர்தன் ஹங்கேர்கர், முகேஷ் சௌதரி, பிரசாந்த் சோலங்கி, அஜய் மண்டல் ஆகியோர் பயிற்சிக்காக சென்னைக்கு வருகை புரிந்துள்ளனர். இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி எப்போது வரவுள்ளார் என்பது குறித்த தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

Story image

அண்மையில் முகேஷ் அம்பானியின் மகனின் இல்லத் திருமண நிழ்ச்சியில் தோனி அவரது மனைவியுடன் கலந்து கொண்டார். அவர் விரைவில் சென்னைக்கு வருகை தந்து பயிற்சியில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூவை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.