அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

சிஎஸ்கே தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் விலகல்!

சிஎஸ்கே தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து ஸ்டீபன் ஃப்ளெமிங் விலகியது பற்றி...

News image

ஸ்டீபன் ஃப்ளெமிங் - X | ChennaiIPL

Updated On :13 ஜூலை 2026, 12:18 pm IST

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஸ்டீபன் ஃப்ளெமிங் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான ஸ்டீபன் ஃப்ளெமிங், ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரராக களமிறங்கினார்.

தொடர்ந்து, 2009 ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றார். கடந்த 18 ஆண்டுகளாக தொடர்ந்து அப்பொறுப்பில் நீடித்து வந்தார்.

இவரின் தலைமையின் கீழ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை ஐபிஎல் கோப்பைகளையும், இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் வென்றுள்ளது. மேலும், 12 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுதிப் பெற்றதுடன், 10 முறை ஐபிஎல் இறுதிப் போட்டிகளுக்குச் சென்றுள்ளது.

இந்த நிலையில், கடந்த மூன்று சீசன்களாக பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற முடியாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடுமாறி வருகின்றது.

ஐபிஎல் ஏலத்தில் தகுதியான வீரர்களை தேர்வு செய்யாதது, அணியில் சரியான வீரர்களை களமிறக்குவதில்லை, மோசமான விளையாட்டு உத்தி என தலைமைப் பயிற்சியாளர் ஃப்ளெமிங்கிற்கு எதிராக ரசிகர்கள் விமர்சனத்தை முன்வைத்து வருகிறார்கள்.

இந்த நிலையில், தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஃப்ளெமிங் விலகியதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஸ்டீபன் ப்ளெமிங் மற்றும் சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் இடையே நடைபெற்ற வெளிப்படையான மற்றும் நேர்மையான தொடர் ஆலோசனைகளுக்குப் பிறகு, அவர் விலகுவதாக முடிவெடுத்துள்ளார்.

இந்திய பிரீமியர் லீக் வரலாற்றிலேயே மிகவும் வெற்றிகரமான மற்றும் நீண்டகாலக் கூட்டணி ஒன்று முடிவுக்கு வருகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

CSK Head Coach Stephen Fleming steps down

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.