முதல் இன்னிங்ஸில் இந்தியா 477: அஸ்வின் சுழலில் தடுமாறும் இங்கிலாந்து (36/3)!

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 477 ரன்கள் எடுத்துள்ளது.
முதல் இன்னிங்ஸில் இந்தியா 477: அஸ்வின் சுழலில் தடுமாறும் இங்கிலாந்து (36/3)!
Ashwini Bhatia

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 477 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் இங்கிலாந்து அணி 1-3 என பின் தங்கியிருக்கிறது. 5வது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 218க்கு ஆல் அவுட்டானது. இதனைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 477 ரன்கள் குவித்துள்ளது.

இங்கிலாந்து பௌலர்கள் சொயிஃப் பஷீர் 5 விக்கெட்டும், ஜேம் ஆண்டர்சன், டாம் ஹார்ட்லி தலா 2 விக்கெட்டும் எடுத்தார்கள்.

முதல் இன்னிங்ஸில் இந்தியா 477: அஸ்வின் சுழலில் தடுமாறும் இங்கிலாந்து (36/3)!
உலக சாதனை படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன்!

2வது இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து பேட்டிங்கில் மீண்டும் தடுமாறி வருகிறது. 9.2 ஓவர் முடிவில் 36க்கு 3 விகெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ரவி அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தினார்.

Ashwini Bhatia

ஜாக் க்ராவ்லி -1, பென் டக்கெட் -2, ஆலி போல் -19 ரன்களுக்கு அஸ்வினிடம் ஆட்டமிழந்தார்கள். இங்கிலாந்தின் பேஸ்பால் பாணி மீண்டும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com