உலக சாதனை படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன்!

பிரபல இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன்
இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன்Ashwini Bhatia

பிரபல இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் இங்கிலாந்து அணி 1-3 என பின் தங்கியிருக்கிறது. 5வது டெஸ்டில் இந்திய அணி 477 ரன்கள் குவித்துள்ளது.

இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய மிகவும் வயதான வேகப்பந்து வீச்சாளர் (41 வருடம் 187 நாள்கள்) என்ற உலக சாதனையை சமீபத்தில் நிகழ்த்திய ஆண்டர்சன் தற்போது புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்முறையாக ஒரு வேகப் பந்து வீச்சாளர் 700 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இது மிகப் பெரிய சாதனை. 41 வயதில் வேகப் பந்து வீச்சாளராக இருப்பது மிகவும் கடினம் என கிரிக்கெட் விமர்சகர்கள் புகழ்கிறார்கள்.

2003இல் டெஸ்டில் அறிமுகமான ஆண்டர்சன் 187 போட்டிகளில் 700 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

உலக அளவில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியல்:

முத்தையா முரளிதரன் - 800

ஷேன் வார்னே - 708

ஜேம்ஸ் ஆண்டர்சன் -700

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com