
ரிஷப் பந்த்தின் நேர்மறையான எண்ணம் அவரை மீண்டும் முழு உடல்தகுதியுடன் கிரிக்கெட் விளையாட செய்துள்ளதாக இந்திய அணியின் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்பட ரிஷப் பந்த் முழு உடல்தகுதியுடன் இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ள நிலையில், ஷிகர் தவான் இவ்வாறு தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: கார் விபத்துக்குப் பிறகு ரிஷப் பந்த் மிகுந்த வலியில் இருந்தார். அவரது அடிப்படைத் தேவைகளைக் கூட அவராக செய்து கொள்ளமுடியவில்லை. விபத்துக்குப் பிறகு சில மாதங்களுக்கு அவரை கவனித்துக் கொள்ள ஒருவரின் உதவி தேவைப்பட்டது. கழிப்பறைக்கு செல்வதற்கு கூட அவருக்கு ஒருவரின் உதவி தேவைப்பட்டது.
அந்த மாதிரியான கடினமான சூழலில் இருந்து தனது பொறுமை, சகிப்புத்தன்மை மற்றும் நேர்மறையான எண்ணங்கள் ஆகியவற்றால் அவர் மீண்டு வந்துள்ளார். அது மிகப் பெரிய விஷயம். அவர் பல அற்புதங்களை செய்ய காத்திருக்கிறார். அவர் மீண்டும் கிரிக்கெட் விளையாடவுள்ளதை பார்க்க ஆவலாக உள்ளேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.