700 விக்கெட்டுகள்,ஷுப்மன் கில் சர்ச்சை, ஓய்வு எப்போது?: மனம் திறந்த ஆண்டர்சன்!

பிரபல இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கடைசியாக நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியின் அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
விக்கெட்டு எடுத்த களிப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன்.
விக்கெட்டு எடுத்த களிப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன். கோப்புப் படம்

பிரபல இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கடைசியாக நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியின் அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

2003இல் டெஸ்டில் அறிமுகமான ஆண்டர்சன் 187 போட்டிகளில் 700 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்முறையாக ஒரு வேகப் பந்து வீச்சாளர் 700 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இது மிகப் பெரிய சாதனை. 41 வயதில் வேகப் பந்து வீச்சாளராக இருப்பது மிகவும் கடினம் என கிரிக்கெட் விமர்சகர்கள் புகழ்கிறார்கள்.

உலக அளவில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

விக்கெட்டு எடுத்த களிப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன்.
ரோஹித் சிறந்த தலைவன்; அவருக்காக உயிரையும் தருவேன்: அஸ்வின் நெகிழ்ச்சி!

இது குறித்தும் ஷுப்மன் கில், குல்தீப் உடனான உரையாடல் குறித்தும் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியதாவது:

எனக்கு 700 விக்கெட்டுகள் எடுத்ததை கொண்டாடுவதில் விருப்பமில்லை. ஏனெனில் 1-4 எனத் தொடரை இழந்துள்ளோம். இந்த சாதனைகளைவிட அணியின் வெற்றியே முக்கியமாகப் பார்க்கிறேன். எனது தந்தை இங்கு இருந்தார், அவருடன் மது அருந்தினேன். என்னை விடவும் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். நான் அணியில் இருப்பது எனது சிறப்பான பந்துவீச்சினால் மட்டுமே தவிர யாரும் எனக்கு எதையும் சும்மா தரவில்லை. மீண்டும் கோடைக் காலத்தில் வரும் டெஸ்ட் போட்டியில் விளையாட ஆர்வமாக காத்திருக்கிறேன்.

விக்கெட்டு எடுத்த களிப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன்.
ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்த அஸ்வின்!

குல்தீப் நான் ஸ்டிரைக்கரில் இருக்கும்போது, ‘அநேகமாக நான்தான் உங்களுடைய 700வது விக்கெட்டாக இருப்பேன் என நினைக்கிறேன்’ எனக் கூறினார். அவர் எனக்காக ஆட்டமிழப்பதாக கூறவில்லை ஆனால் அப்படி தோன்றுவதாகக் கூறினார். நாங்கள் இருவருமே சிரித்தோம்.

ஷுப்மன் கில்லிடம் நான், ‘இந்தியாவுக்கு வெளியே எவ்வளவு ரன் எடுத்துள்ளாய்?’ என்பதுபோல ஏதோ கேட்டேன் அதற்கு ஷுப்மன் கில், ‘இது ஓய்வு பெறுவதற்கான நேரம்’ எனக் கூறினார். பின்னர் இரண்டு பந்துகளில் அவரை அவுட் ஆக்கினேன் என ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com