பெங்களூருவில் ஜோஃப்ரா ஆர்ச்சர்!

பிரபல இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் பெங்களூருவில் இருக்கிறார்.
ஜோஃப்ரா ஆர்ச்சர் (கோப்புப் படம்)
ஜோஃப்ரா ஆர்ச்சர் (கோப்புப் படம்)

பிரபல இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் பெங்களூருவில் இருக்கிறார்.

காயம் காரணமாக ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி உள்பட பல போட்டிகளில் இங்கிலாந்தின் பிரபல வேகப் பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் விளையாடவில்லை. 

சமீபத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ஆர்ச்சர் விடுவிக்கப்பட்டார். 2022இல் ரூ.8 கோடி ஏலத்தில் எடுக்கப்பட்ட ஆர்ச்சர் மும்பை அணிக்கு ஒழுங்காக விளையாடவில்லை. காயம் காரணமாக மோசமான பங்களிப்பினையே அளித்தார். 

ஜோஃப்ரா ஆர்ச்சர் (கோப்புப் படம்)
சிஎஸ்கே-வின் வெற்றிக்கான ரகசியம் இதுதான்: டுவைன் பிராவோ

28 வயதான ஆர்ச்சர் 2024இல் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க உள்ளதால் அவரது வேலைப் பளுவைக் குறைக்க ஐபிஎல் போட்டிகளில் விளையாடமாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சசெக்ஸ் அணியுடன் பெங்களூரில் கர்நாடக அணியுடன் விளையாடி வருகிறார். பந்து வீசும் விடியோவினை சசெக்ஸ் அணி வெளியிட்டுள்ளது. பயிற்சி ஆட்டத்தில் விக்கெட்டினையும் வீழ்த்தியுள்ளார் ஆர்ச்சர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com