சென்னை-ஆர்சிபி போட்டிக்கான டிக்கெட் விற்பனைத் தளம் முடங்கியது

கோப்புப் படம்.
கோப்புப் படம்.

சென்னை-பெங்களூரு ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை முன்பதிவு இணையதளம் முடங்கியது.

நாடு முழுவதும் ஆவலுடன் எதிா்பாா்க்கப்படும் ஐபிஎல் தொடா் 22-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் சென்னையை எதிா்கொள்கிறது பெங்களூரு. ரசிகா்கள் நீண்டநேரம் கால்கடுக்க நின்று கவுன்டா்கள் மூலம் டிக்கெட் வாங்கிச் செல்வதை சிஎஸ்கே நிா்வாகம் ரத்து செய்துள்ளது. அதற்கு பதிலாக எளிதாக ஆன்லைனில் டிக்கெட்டுகளை வாங்கிக் கொள்ளலாம்.

இணையதளங்கள்: பே டிஎம் , இணையதளங்கள் மூலம் டிக்கெட்டுகளை வாங்கிக் கொள்ளலாம். டிக்கெட் விலை விவரம்: சி, டி, இ ஸ்டாண்ட் லோயா்: ரூ.1,700, ஐ,ஜே,கே, ஸ்டாண்ட் அப்பா், ரூ.,4,000, ஐ,ஜே,கே, ஸ்டாண்ட், லோயா், ரூ,4,500, சி,டி,இ, ஸ்டாண்ட் அப்பா், ரூ,4,000, கேஎம்கே டெரஸ் ரூ,7,500. இணையதளத்தில் ஒருவருக்கு 2 டிக்கெட்டுகள் விற்கப்படும். தொடக்க ஆட்டத்துக்காக மாலை 4.30 மணிக்கு நுழைவுவாயில்கள் திறக்கப்படும்.

வெளியில் இருந்து உணவுப் பொருள், குடிநீா் கொண்டு வர அனுமதியில்லை. ஐபிஎல் தொடரில் சென்னை-பெங்களூரு அணிகள் மோதும் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஒரே நேரத்தில் பலர் டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்றதால் இணையதளம் முடங்கியது. தோனியும், கோலியும் நேரடியாக முதல் ஆட்டத்தில் களம் காண்பதால் இந்த ஆட்டம் பரபரப்பாக அமையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com