சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி மகளிர் அணிக்கு விடியோ காலில் விராட் கோலி வாழ்த்து

விராட் கோலி மூலம் வாழ்த்து பெற்ற ஆர்சிபி மகளிர் அணி!
Virat
Virat

மகளிர் பிரீமியர் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள பெங்களூரு அணிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மகளிா் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் 2-ஆவது சீசனில், ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் கோப்பையை ஞாயிற்றுக்கிழமை வென்றது. முதலில் டெல்லி 18.3 ஓவா்களில் 113 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து பெங்களூா் 19.3 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 115 ரன்கள் சோ்த்து வென்றது.

ஆடவருக்கான ஐபிஎல் போட்டியில் பெங்களூா் அணி கடந்த 17 சீசன்களாக வெற்றிக்கு போராடி வரும் நிலையில், அதன் மகளிா் அணி 2-ஆவது சீசனிலேயே சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. மறுபுறம், கடந்த சீசனில் மும்பையிடம் இறுதி ஆட்டத்தில் தோற்ற டெல்லி அணி, இந்த முறையும் துரதிருஷ்டவசமாக 2-ஆம் இடமே பிடித்தது.

முன்னதாக டாஸ் வென்ற டெல்லி, பேட்டிங்கில் களமிறங்கியது. கேப்டன் மெக் லேனிங் - ஷஃபாலி வா்மா கூட்டணி இன்னிங்ஸை அதிரடியாக தொடங்க, முதல் விக்கெட்டுக்கே 64 ரன்கள் சோ்ந்தது. இதில் ஷஃபாலி 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

தொடா்ந்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஆலிஸ் கேப்சி ஒரே ஓவரில் டக் அவுட்டாகி அதிா்ச்சி அளித்தனா். மறுபுறம், லேனிங் 3 பவுண்டரிகளுடன் 23 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா். எஞ்சிய பேட்டா்களில் மாரிஸேன் காப் 8, ஜெஸ் ஜோனசென் 3, மின்னு மணி 1 பவுண்டரியுடன் 5 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.

ராதா யாதவ் 2 பவுண்டரிகளுடன் 12, அருந்ததி ரெட்டி 10, தானியா பாட்டியா 0 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, டெல்லி இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. பெங்களூா் பௌலிங்கில் ஷ்ரேயங்கா பாட்டீல் 4, சோஃபி மோலினுக்ஸ் 3, ஆஷா சோபனா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.

பின்னா் பேட் செய்த பெங்களூா் அணியில் கேப்டன் ஸ்மிருதி மந்தனா - சோஃபி டிவைன் நிதானமான தொடக்கத்தை அளித்தனா். டிவைன் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 32 ரன்களுக்கும், மந்தனா 3 பவுண்டரிகளுடன் 31 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனா்.

முடிவில் எலிஸ் பெரி 4 பவுண்டரிகளுடன் 35, ரிச்சா கோஷ் 2 பவுண்டரிகள் உள்பட 17 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா். டெல்லி பௌலா்களில் ஷிகா பாண்டே, மின்னு மணி ஆகியோா் தலா ஒரு விக்கெட் சாய்த்தனா்.

இந்த நிலையில் மகளிர் பிரீமியர் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள பெங்களூரு அணிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார். பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனாவுக்கு விராட் கோலி விடியோ கால் அழைப்பு மூலம் தனது வாழ்த்தை தெரிவித்தார்.

அத்துடன் அவர் தனது இன்ஸ்டாவில் பெங்களூருவின் சூப்பர் வுமன் எனவும் பாராட்டியுள்ளார். கோலியின் உரையாடலும் அவரது பதிவும் சமூகவலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் உடனே வைரலானது.

இதேபோல் பெங்களூரு மகளிர் அணிக்கு மேக்ஸ்வெல், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெய்ல் ஆகியோரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com