12 ரன்களுக்கு ஆட்டமிழந்து டி20யில் மோசமான சாதனை படைத்த மங்கோலியா!

ஜப்பானுக்கு எதிரான போட்டியில் மங்கோலியா 12 ரன்களுக்கு ஆட்டமிழந்து மோசமான சாதனையை படைத்துள்ளது.
12 ரன்களுக்கு ஆட்டமிழந்து டி20யில் மோசமான சாதனை படைத்த மங்கோலியா!
படம்: மங்கோலியா, ஜப்பான் கிரிக்கெட் / எக்ஸ்

7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட மங்கோலிய அணி ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது. இதில் முதல் போட்டியில் 166 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2ஆவது போட்டி சனோ கிரிக்கெட் ஆடுகளத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜப்பான் அணி 217/7 ரன்கள் எடுத்தது. ஜப்பான் அணியில் அதிகபட்சமாக சபோரிஷ் ரவிசந்திரன் 69 ரன்களும் கேப்டன் பிளெம்மிங் 32, இப்ராஹிம் டகஹாஷி 31 ரன்களும் எடுத்தனர்.

12 ரன்களுக்கு ஆட்டமிழந்து டி20யில் மோசமான சாதனை படைத்த மங்கோலியா!
எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

அடுத்து ஆடிய மங்கோலிய அணி 8.2 ஓவரில் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 5 வீரர்கள் டக் அவுட். ஒருவர் ரன்னேதும் எடுக்காமல் ஆட்டமிழக்கமால் இருந்தார். இவ்வணியில் அதிகபட்சமாக டூர்-எர்டன் சுமியா 4 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஜப்பான் 205 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. ஆசிய போட்டிகளில் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் கால்பதித்த மங்கோலிய அணி 7 மாதங்களில் மோசமான சாதனையை படைத்துள்ளது.

சரவதேச டி20 கிரிக்கெட் தொடரில் மங்கோலிய அணி மோசமான சாதனையை படைத்துள்ளது. 2ஆவது மிகக் குறைவான ரன்களை எடுத்துள்ளது. முதலிடத்தில் (10 ரனக்ள் ) இஸ்லே ஆஃப் மேன் அணி உள்ளது.

12 ரன்களுக்கு ஆட்டமிழந்து டி20யில் மோசமான சாதனை படைத்த மங்கோலியா!
பாகுபலி அனிமேஷனில் தோனியின் முகம்: ராஜமௌலி கூறியது என்ன?

டி20யில் குறைவான ரன்களை ரன்களை எடுத்த அணிகள்

இஸ்லே ஆஃப் மேன் - 10 ரன்கள் (2023)

மங்கோலியா - 12 ரன்கள் (2024)

துருக்கி - 21 ரன்கள் ( 2019)

சீனா - 23 ரன்கள் (2023)

ருவாண்டா- 24 ரன்கள் (2023)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com