
ஐபிஎல் 2024 தொடரில் இனிவரும் ஒவ்வொரு போட்டியின் முடிவும் ஏதேனும் ஒரு அணியின் ‘பிளே-ஆஃப்’ வாய்ப்பை பறிக்கவுள்ளது.
ஐபிஎல் தொடரில் லீக் ஆட்டங்களில் பங்கேற்றுள்ள 10 அணிகளில் 4 மட்டுமே அடுத்தகட்டமாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். ஏற்கெனவே ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் இரண்டு இடங்களை உறுதி செய்துவிட்டனர்.
மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளது.
மீதமுள்ள இரண்டு பிளே ஆஃப் இடங்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, தில்லி கேபிடல்ஸ், லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள் போட்டியில் உள்ளன.
தில்லி கேபிடல்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால், ஆர்சிபியுடனான போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற வேண்டும், சன் ரைசர்ஸ் அடுத்து விளையாடவில்லை இரு போட்டிகளிலும் படுதோல்வி அடையவேண்டும்.
அதேபோல், லக்னெள அணி பிளே ஆஃப் செல்ல வாய்ப்பு மிகவும் குறைவு. அடுத்து மும்பையுடன் விளையாடவுள்ள இறுதி ஆட்டத்தில் 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும் லக்னெளவின் ரன் ரேட் -0.351-ஆகதான் இருக்கும்.
சன் ரைசர்ஸ் அடுத்து விளையாடவுள்ள இரு போட்டிகளில் ஏதேனும் ஒன்றிலும், சென்னை அணி பெங்களூருக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் இரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடும்.
இதற்கிடையே, பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று, சன் ரைசர்ஸ் ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும் சென்னை வெளியேறிவிடும்.
பெங்களூருவுக்கு எதிராக சென்னை அணி படுதோல்வி அடைந்தாலும், சன் ரைசர்ஸ் இரு போட்டிகளிலும் தோற்றால், சென்னைக்கான வாய்ப்பு கிடைக்கும்.
பெங்களூரு அணியை பொறுத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும். அல்லது சென்னை அணி முதலில் பேட் செய்து 200 ரன்கள் அடித்தால், அதனை 18.1 ஓவரில் சேஸ் செய்தால் எவ்வித பிரச்னையும் இன்றி பிளே-ஆஃப் சென்றுவிடும்.
முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ள ராஜஸ்தான், கொல்கத்தா அணிகள் நேரடியாக முதல் தகுதிச் சுற்றில் விளையாடி நேரடியாக இறுதிப் போட்டிக்கு சென்றுவிடும்.
மூன்றாவது மற்றும் நான்காவது இடம் பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் சுற்றில் விளையாடும். அதில் வெற்றி பெறும் அணி, முதல் தகுதிச் சுற்றில் தோற்ற அணியுடன் விளையாடும்.
இந்த இரண்டாவது தகுதிச் சுற்றில் வெற்றிபெறும் அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
அடுத்து வரும் 10 ஆட்டங்கள் ஐபிஎல் ரசிகர்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.