டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் முன்னேறும்; முன்னாள் வீரர் நம்பிக்கை!

பாகிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என அந்த அணியின் முன்னாள் வீரர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணி வீரர்கள்
பாகிஸ்தான் அணி வீரர்கள்படம் | பாகிஸ்தான் கிரிக்கெட் (எக்ஸ்)

பாகிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என அந்த அணியின் முன்னாள் வீரர் ஷகித் அஃப்ரிடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி மழையினால் கைவிடப்பட்ட நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணி வீரர்கள்
டி20 உலகக் கோப்பை தொடருக்காக அமெரிக்கா சென்றடைந்த இந்திய வீரர்கள்!

இந்த நிலையில், பாகிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் எனவும், மிடில் ஆர்டரில் விளையாடும் வீரர்கள் ஸ்டிரைக் ரேட்டில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அந்த அணியின் முன்னாள் வீரர் ஷகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.

ஷகித் அஃப்ரிடி (கோப்புப்படம்)
ஷகித் அஃப்ரிடி (கோப்புப்படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரையில், வீரர்களின் மிடில் ஆர்டர் ஸ்டிரைக் ரேட் கவலைக்குரியதாக உள்ளது. அதிலும் குறிப்பாக, 7-13 ஓவர்களில் வீரர்களின் ஸ்டிரைக் ரேட் கவலையளிக்கும் விதமாக உள்ளது. ஆனால், வீரர்கள் தங்களது ஸ்டிரைக் ரேட்டில் முன்னேற்றம் கொண்டு வருவார்கள் என நம்புகிறேன். பாகிஸ்தான் அணி உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறும். அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் போட்டி நடைபெறுவதே அதற்கு காரணம். அங்குள்ள ஆடுகளங்களின் தன்மை பாகிஸ்தான் அணிக்கு ஏற்றவாறு இருக்கும். மற்ற அணியில் உள்ள பந்துவீச்சாளர்களைக் காட்டிலும் பாகிஸ்தானிடம் வலுவான பந்துவீச்சு உள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com