நார்வே செஸ் போட்டியின் 3ஆவது சுற்றில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா முன்னாள் உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்தினார்.
செஸ் தரவரிசையில் உலகில் முதலிடம் பிடித்துள்ள கார்ல்சனை கிளாசிக்கல் செஸ் போட்டியில் முதல்முறையாக தமிழக வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தி அசத்தியுள்ளார். 2ஆம் சுற்றில் பிரக்ஞானந்தா நடப்பு சாம்பியன் டிங் லிரெனிடம் தோல்வியுற்று இருந்தார். இந்நிலையில் கார்ல்சனை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
18வயதான பிரக்ஞானந்தா கார்ல்சனை அவரது சொந்த மண்ணில் இன்று அதிகாலை மோதினார். வெள்ளை நிற காய்களுடன் பிரக்ஞானந்தாவும் கருப்பு நிற காய்களுடன் கார்ல்சனும் களமிறங்கினார்கள். தனது 37ஆவது நகர்த்தலில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.
இதற்கு முன்பாகவும் கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்தியிருக்கிறார். அதெல்லாம் ரேபிட், பிளிட்ஸ் போட்டிகளில். தற்போதுதான் முதல்முறையாக கிளாசிக்கல் செஸ் போட்டியில் உலகின் நெ.1 வீரரை வீழ்த்தியுள்ளார் பிரக்ஞானந்தா.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் பிரக்ஞானந்தா 5.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார். கார்ல்சன் 5ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.