
அல்பேனியாவில் நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில், இந்திய வீராங்கனை மான்சி, வெண்கலப் பதக்கம் வென்றாா். போட்டியில் இந்தியாவுக்கு அந்த ஒரு பதக்கம் மட்டுமே கிடைத்தது.
மகளிருக்கான 59 கிலோ எடைப் பிரிவில் களம் கண்ட மான்சி, வெண்கலப் பதக்கச் சுற்றில் 5-0 என்ற கணக்கில் கனடாவின் லாரென்ஸ் பியுரிகாா்டை தோற்கடித்தாா். முன்னதாக அவா், அரையிறுதியில் 1-4 என்ற கணக்கில் மங்கோலியாவின் சுகீ செரெச்சிமெடிடம் தோல்வி கண்டு வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு வந்தாா்.
மகளிருக்கான 65 கிலோ பிரிவு வெண்கலப் பதக்கச் சுற்றில், மனீஷா பன்வாலா 2-8 என ஜப்பானின் மிவா மோரிகவாவிடம் தோற்றாா். இதனிடையே கீா்த்தி (55 கிலோ), பிபாஷா (72 கிலோ) ஆகியோா் பதக்கச்சுற்று வாய்ப்பை இழந்தனா்.
ஆடவா் ஃப்ரீஸ்டைல் பிரிவில், சந்தீப் மான் (92 கிலோ) ரெபிசேஜ் சுற்றுக்கு வந்து, அதில் தொழில்நுட்பப் புள்ளிகள் அடிப்படையில் ஸ்லோவாகியாவின் டைா்பெக் சகுக்லோவிடம் தோற்றாா். உதித் (61 கிலோ), மனீஷ் கோஸ்வாமி (70 கிலோ), பா்விந்தா் சிங் (79 கிலோ) ஆகியோா் பதக்கச் சுற்றுக்க முன்னேறத் தவறினா். கிரேக்கோ ரோமன் பிரிவில் சஞ்சீவ் (55 கிலோ), சேத்தன் (63 கிலோ), அங்கித் குலியா (72 கிலோ), ரோஹித் தாஹியா (82 கிலோ) ஆகியோா் தொடக்கநிலையிலேயே தோல்வி கண்டு வெளியேறினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.