வெற்றியைவிட ரசிகரின் மரணத்துக்கு முக்கியத்துவம் அளித்த ஜெர்மனியின் கிளப் அணி!

சாம்பியன் லீக் கால்பந்து போட்டியில் ரசிகரின் உயிரிழப்புக்கு முக்கியத்துவம் கொடுத்த ஜெர்மனியின் கால்பந்து கிளப் அணி.
எஃப்சி பயர்ன் மியூனிக் அணி
எஃப்சி பயர்ன் மியூனிக் அணி
Published on
Updated on
1 min read

சாம்பியன்ஸ் லீக்கில் எஃப்சி பயர்ன் மியூனிக் அணி வெற்றி பெற்றதைவிட ரசிகரின் உயிரிழப்பு நிகழ்வு கவனம் ஈர்த்தது.

சாம்பியன்ஸ் லீக்கில் தொடர் 2 தோல்விகளை சந்தித்து வந்த எஃப்சி பயர்ன் அணி பென்பிசியா அணியுடனனான போட்டியில் 1-0 என கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

புதன்கிழமை மாலை நடைபெற்ற இந்தப் போட்டியில் 67ஆவது நிமிடத்தில் எஃப்சி பயர்ன் மியூனிக் அணியின் ஜமால் முசியாலவின் ஹெட்டரால் கோல் கிடைத்தது.

இந்தப் போட்டியின்போது ரசிகர் ஒருவருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டது. மருத்துவமனைக்கு செல்லும்போது அந்த ரசிகர் உயிரிழந்துவிட்டார்.

இது குறித்து எஃப்சி பெய்ர்ன் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது:

பென்பிசியாவுடனான 1-0 என்ற வெற்றியை ரசிகரின் மரணம் விஞ்சிவிட்டது. துக்க நிகழ்வு சாம்பியன் லீக்கில் நமது அணி பெற்ற வெற்றியைவிட சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனியில் உள்ள அலியன்ஸ் அரேனா கால்பந்து மைதானத்தில் ரசிகருக்கு ஏற்பட்ட மருத்துவ உதவியினால் ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆட்டம் பாதிக்கப்பட்டது.

உரத்த குரலில் தன்னம்பிக்கையுடன் தனது அணிக்கு ஆதரவளிக்கும் ரசிகருக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆட்டத்தின் ஒளிபரப்பினைக்கூட குறைத்தோம்.

சாம்பியன் லீக்கினை ஒளிப்பதிவு செய்யும் நிர்வாகத்துக்கு இறுதி ஒரு மணி நேரத்துக்கு முன்பாக மருத்துவமனை சென்ற ரசிகர் உயிரிழந்ததாக செய்தி கிடைத்தது. எஃப்சி பெய்ர்ன் ரசிகரின் உறவினர்களுக்கு இரங்களை தெரிவித்துக்கொள்கிறது எனப் பதிவிட்டுள்ளது.

ஜெர்மனியில் நடைபெறும் புன்டெஸ்லீகா தொடரில் எஃப்சி பெய்ர்ன் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

சாம்பியன்ஸ் லீக்கில் 17ஆவது இடத்தில் இருக்கிறது. இந்தத் தொடரில் லிவர்பூல் அணி 4 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.

கால்பந்து ரசிகர்களுக்கு அந்த கிளப் அணி முக்கியத்துவம் கொடுத்தது உலக கால்பந்து ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

எஃப்சி பயர்ன் மியூனிக் அணி ஜெர்மன் கால்பந்து வரலாற்றில் 33 தேசிய டைட்டில்களையும் 2013-2023 வரை தொடர்சியாக வெற்றிகளையும் பெற்று மிகவும் வெற்றிகரமான பிரபலமான அணியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com