
கால்பந்து உலகக் கோப்பையின் தகுதிச் சுற்று ஆட்டத்தில் பராகுவே அணி மெஸ்ஸியின் டிஷர்ட் அணிந்து வர உள்நாட்டு மக்களுக்கு தடை விதித்துள்ளது.
கால்பந்து உலகக் கோப்பை 2026ஆம் ஆண்டுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் (CONMEBOL) தென்னாப்பிரிக்க கால்பந்து கூட்டமைப்பில் ஆர்ஜென்டினாவும் பராகுவே அணியும் இருக்கின்றன.
கடந்த முறை உலகக் கோப்பையினை மெஸ்ஸி தலைமையில் ஆர்ஜென்டினா அணி வென்றது குறிப்பிடத்தக்கது.
தற்போது, நடப்பு சாம்பியன் அணியுடன் பராகுவே அணி தனது சொந்த மண்ணில் வரும் வெள்ளிக்கிழமை (நவ.15) இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு மோதுகிறது.
தடைக்கு காரணம்
இந்தப் போட்டிக்கு பராகுவே அணி தங்களது உள்நாட்டு மக்களுக்கு மெஸ்ஸி அல்லது ஆர்ஜென்டினா சம்பந்தப்பட்ட எந்த சீருடையையும் அணிந்து வரக்கூடாதென கூறியுள்ளது.
மெஸ்ஸியின் பார்சிலோனா, இண்டர் மியாமி, ஆர்ஜென்டினா போன்ற எந்த வகையிலும் 10 என்ற எண் பதிந்த சீருடையை அணிந்து வரக்கூடாதென பராகுவே திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
மெஸ்ஸிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். சொந்த மண்ணில் தேசிய அணிக்கு ஆதரவளிக்க இப்படி செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள்.
மெஸ்ஸி 8 முறை பேலன்தோர் (தங்கப் பந்து) விருதினைப் பெற்றுள்ளார். தற்போது, தகுதிச் சுற்றுப் போட்டியிலும் தென்னாப்பிரிக்க கூட்டமைப்புப் பிரிவில் அதிக கோல்கள் அடித்து முதலிடத்தில் இருக்கிறார்.
இது முதல்முறையல்ல
இதற்கு பராகுவே அணியின் மிட்ஃபீல்டர் வில்லஸ்போ, “வெளிநாட்டு வீரர்களின் பெயர் பதிந்த சீருடைகளை அனுமதிக்கப்படாது. சொந்த மண்ணில் எங்களுக்கு ஆதரவு கிடைக்க இந்த மாதிரி செய்யப்படுகிறது” என்றார்.
இதற்கு முன்பும் பிரேசில் உடனான போட்டியில் வினிசியஸ் ஜுனியர் சீருடையை அணிந்துவர தடை விதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.