கிறிஸ்டியானோ ரொனால்டோ
கிறிஸ்டியானோ ரொனால்டோLuis Vieira

ரொனால்டோ அசத்தல்..! காலிறுதிக்கு தகுதிபெற்றது போர்ச்சுகல்!

நேஷ்னல் லீக் கால்பந்து போட்டியில் போர்ச்சுகல் அணி போலந்தை 5-1 என்ற கோல் கணக்கில் வென்றது.
Published on

ஐரோப்பிய கண்டத்தில் இருக்கும் நாடுகளுக்கிடையேயான நேஷ்னல் லீக் கால்பந்து போட்டியில் போர்ச்சுகள் அணியும் போலந்து அணியும் மோதின.

இந்தப் போட்டியில் போர்ச்சுகலின் நட்சத்திர நாயகன் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 கோல்கள் (72', 87') அடித்து அசத்தினார்.

முதல் கோல் பெனால்டியிலும் 2ஆவது கோல் பைசைக்கிள் கிக்கிலும் கோல் அடித்து அசத்தினார்.

குரூப் ஏ1இல் போர்ச்சுகல் அணி 13 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.

பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின், போர்ச்சுகல் அணிகள் காலிறுதுக்கு தகுதி பெற்றுள்ளன. மார்ச் 20-23ஆம் தேதிகளில் இது நடைபெறும்.

2026ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பைக்கும் இதில் வரும் 8 அணிகள் தகுதிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசி 10 நிமிடங்களில் 3 கோல்கள் அடித்து போர்ச்சுகல் அசத்தியது.

ரொனால்டோ சர்வதேச போட்டிகளில் 135 கோல்களை அடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த தோல்வியின் மூலம் 4 புள்ளிகளுடன் ஏ1 குரூப்பில் 3ஆவது இடத்தில் உள்ள போலந்து அணி காலிறுதிக்கு தகுதிபெறும் நம்பிக்கைய இழந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com