தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்: பென் ஸ்டோக்ஸ் விலகல்

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் இருந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விலகியுள்ளார்.

News image

பென் ஸ்டோக்ஸ் (கோப்புப் படம்)

Updated On :6 அக்டோபர் 2024, 6:23 am

DIN

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் இருந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விலகியுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இவ்இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முல்தானி நாளை தொடங்குகிறது.

இந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வீரர்களை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. அதில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பெயர் இடம் பெறவில்லை. இங்கிலாந்தின் தி ஹண்ட்ரட் தொடரில் நார்தன் சூப்பர் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடியபோது, இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸுக்கு காயம் ஏற்பட்டது.

காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து அவர் விலகினார். இருப்பினும் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் பாகிஸ்தானுக்கு எதிராக நாளை தொடங்கவிருக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் விளையாடவில்லை.

முழு உடற் தகுதியை எட்டாததால் பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்டில் இருந்தும் அவர் விலகி உள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. எனவே அவருக்குப் பதிலாக இங்கிலாந்து அணியை ஆலி போப் வழிநடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.