
இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி கால்பந்து உலகின் மிகவும் பிரபலமான எல் கிளாசிக்கோ என்றழைக்கப்படும் பார்சிலோனா - ரியல் மாட்ரிட் குறித்து பேசியுள்ளார்.
லா லீகா தொடரில் பார்சிலோனா அணியும் ரியல் மாட்ரிட் அணியும் அக்.27ஆம் தேதி மோதின. ரசிகர்கள் மத்தியில் எல் கிளாசிக்கோ என்றழைக்கப்படும் இந்தப் போட்டியில் 4-0 என பார்சிலோனா அணி அதிரடியான வெற்றியைப் பெற்றது.
பார்சிலோனாவின் ரஃபினா, லெவண்டாவ்ஸ்கி, யமால் சிறப்பாக விளையாடினார்கள்.
இந்த வெற்றியின் மூலம் பார்சிலோனா புள்ளிப் பட்டியலில் 30 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. 13 மாதங்களுக்குப் பிறகு ரியல் மாட்ரிட் தோல்வியை சந்தித்துள்ளது.
மார்ச் 2023 முதல் தொடர்ச்சியாக 4 முறை ரியல் மாட்ரிட் உடன் தோல்வியை சந்தித்துள்ள பார்சிலோனா 4-0 என அதிரடியாக வென்று அசத்தியது.
இதனால் மெஸ்ஸி ரசிகர்களும் ரொனால்டோ ரசிகர்களும் சமூக வலைதளங்களில் சண்டையிட்டது குறிப்பிடத்தக்கது.
குஜராத்தில் நடைபெற்ற விழாவில் மோடி பேசியதாவது:
ஸ்பெயினில் யோகா மிகவும் புகழ்பெற்றதென கேள்விப்பட்டேன். அதேயளவுக்கு ஸ்பெயினின் கால்பந்து விளையாட்டு இந்தியாவில் பெரிதும் விரும்பப்படுகிறது. நேற்று நடைபெற்ற எல்கிளாசிக்கோ பார்சிலோனா - ரியல் மாட்ரிட் போட்டி குறித்து இந்தியாவில் விவாதிக்கிறார்கள்.
பார்சிலோனாவின் அபார வெற்றி குறித்து ஸ்பெயினில் எப்படி ரசிகர்கள் விவாதிப்பார்களோ அதே அளவுக்கு இந்தியாவிலும் இரண்டு அணி ரசிகர்களும் சமூக வலைதளங்களில் சண்டையிடுகிறார்கள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.