பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பாராலிம்பிக்ஸ் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. மகளிருக்கான 50 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனைகள் அவனி லெகரா இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார்.
அதேச் சுற்றில் மற்றொரு இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான மோனா அகர்வால், 13-வது இடத்தைப் பிடித்து இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறினார்.
அவனி லெகரா 1159 புள்ளிகளையும், மோனா அகர்வால் 1147 புள்ளிகளையும் எடுத்தனர்.
முதல் எட்டு இடங்களைப் பிடிக்கும் வீராங்கனைகள் தகுதிச் சுற்றில் இருந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்கள்.
22 வயதான அவனி லெகரா, 11 வயது சிறுமியாக இருந்தபோது கார் விபத்தில் சிக்கி இடுப்பிற்கு கீழே உள்ள உறுப்புகள் செயல்படாமல் போனது. ஆனாலும், துவண்டுவிடாமல் துப்பாக்கி சுடுதலில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் அவனி லெகரா.
கடந்த வெள்ளிக்கிழமை பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இருந்ததார். மேலும், இதேப் போட்டியில் மோனா அகர்வால் வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.