பாராலிம்பிக்கில் தோழியிடம் காதலை வெளிப்படுத்திய வீரர்!

விபத்தில் மனைவி இறந்த நிலையில், தோழியிடம் காதலை வெளிப்படுத்தினார் ஓசோலா.
தோழியிடம் காதலை வெளிப்படுத்தும் அலெஸாண்ட்ரோ ஓசோலா
தோழியிடம் காதலை வெளிப்படுத்தும் அலெஸாண்ட்ரோ ஓசோலாஇன்ஸ்டாகிராம்
Published on
Updated on
2 min read

பாராலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், இத்தாலி வீரர் ஒருவர் தனது நீண்ட நாள் தோழியிடம் காதலை வெளிப்படுத்திய புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

17வது பாராலிம்பிக் போட்டிகள் பாரீஸ் நகரில் கடந்த 28ஆம் தேதிமுதல் நடைபெற்று வருகிறது. 4ஆம் நாளான செப்டம்பர் 1ஆம் தேதி, ஆடவருக்கான ஓட்டப் பந்தயம் நடைபெற்றது.

இறுதிப் போட்டியில் இத்தாலி வீரர் அலெஸாண்ட்ரோ ஓசோலா கலந்துகொண்டு தோல்வி அடைந்தார். எனினும் அவருக்கு அந்த நாள் மறக்க முடியாத நாளாகவே மாறியது.

பார்வையாளர்கள் அரங்கில் இருந்த தனது நீண்ட நாள் தோழியான அரியன்னா மந்தரடோனி என்பவரிடம் வந்து மண்டியிட்டு மோதிரத்தை நீட்டி தனது காதலை வெளிப்படுத்தினார்.

மகிழ்ச்சி வெள்ளத்தில் அலெஸாண்ட்ரோ ஓசோலா, காதலி அரியன்னா மந்தரடோனி
மகிழ்ச்சி வெள்ளத்தில் அலெஸாண்ட்ரோ ஓசோலா, காதலி அரியன்னா மந்தரடோனிஇன்ஸ்டாகிராம்

நீங்கள் வேடிக்கையான மனிதர் எனக் குறிப்பிட்ட அரியன்னா, பின்னர் ஓசோலாவின் காதலை ஏற்றுக்கொண்டார். பின்னர் இருவரும் முத்தங்களைப் பரிமாறிக்கொண்டனர்.

இதன் புகைப்படங்களை செப்டம்பர் 2ஆம் தேதி ஓசோலா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த படங்கள் தற்போது பலரால் பகிரப்பட்டு வருகின்றன.

இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஓசோலா, இருசக்கர வாகன விபத்தின்போது தனது மனைவியை இழந்தார். அந்த விபத்தில் அவர் கால் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுவந்த அவர், தற்போது தனது நீண்ட நாள் தோழியிடம் காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் காதலை வெளிப்படுத்தியது குறித்து பேசிய ஓசோலா, ''என்னுடைய எல்லா போட்டிகளிலும் என்னுடன் பயணித்தவர் அரியன்னா. 2019 கோடையில் இத்தாலியில் நடைபெற்ற போட்டியின்போது அவரை முதன்முதலில் சந்தித்தேன். வாழ்க்கையில் எதையும் எதிர்பார்க்காமல் சென்றுகொண்டிருந்த நாள்களின்போது, அவர் என் வாழ்வில் வந்தார். வாழ்க்கை மிகவும் ஆச்சரியமானது. சில நாள்களில் சில விஷயங்கல் சரியாக நடக்கவில்லை என்றாலும் கூட, இந்தப் பயணம் அற்புதமான நாளை உண்டாக்கும்'' எனக் குறிப்பிட்டார்.

தோழியிடம் காதலை வெளிப்படுத்தும் அலெஸாண்ட்ரோ ஓசோலா
பாரா சைக்கிளிங்: 8-வது தங்கம் வென்றார் ஒக்ஸானா!

மேலும், ''என் மீது நான் வைத்துள்ள நம்பிக்கையை விட அரியன்னா என் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளார். அது வியப்பாக இருக்கும். உன்னால் முடியும், உன்னால் வெல்ல முடியும், உன்னால் முயற்சிக்க முடியும் என்பது மட்டுமே எல்லா சூழலிலும் அவர் எனக்கு கூறுவது. இது எல்லோருக்கும் கிடைக்க வேண்டிய ஒன்று. எல்லோரும் இதுபோன்ற நபரைக் தன் வாழ்வில் கண்டடைவார்கள் என நம்புகிறேன். தற்போது அவர் என்னுடைய மனைவி. என்னுடைய வாழ்க்கை'' என ஓசோலா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com