கால்பந்து உலகில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் பாலன் டி’ஓர் விருது பரிந்துரைப் பட்டியலில் கால்பந்து ஜாம்பவான்களான லயனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ பெயர் இல்லாததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பாலன் டி’ஓர் விருதுகள் வருகிற அக்டோபர் மாதம் வழங்கப்படவுள்ளன. இந்த நிலையில் இந்த விருதை இதுவரை 8 முறை வென்றவரான மெஸ்ஸியின் பெயரும், 6 முறை வென்றவரான ரொனால்டோவின் பெயரும் இடம்பெறாதது கால்பந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வினிசியஸ் ஜூனியர், ரோட்ரி, ஜூட் பெல்லிங்ஹாம், கைலியன் எம்பாப்பே, எர்லிங் ஹாலண்ட் மற்றும் ஹாரி கேன் ஆகியோர் பெயர்கள் பாலன் டி’ஓர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
மிகவும் இளம் வீரரான ஸ்பெயின் நாட்டின் லாமின் யாமலும் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
2006 ஆம் ஆண்டு முதல் முறையாக பாலன் டி’ஓர் விருதுக்கு மெஸ்ஸிக்கு பரிந்துரைக்கப்பட்டார். அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு முதல் முறையாக இந்த விருதை வென்றார். அதன் தொடர்ச்சியாக 2010, 2011, 2012, 2013 ஆம் ஆண்டுகளில் 4 விருதுகளை வென்றார்.
2004 ஆம் ஆண்டில் ரொனால்டோ முதல் முறையாக இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
2008 ஆம் ஆண்டில் இருந்து மெஸ்ஸியும், ரொனால்டோவும் சேர்ந்து 13 முறை இந்த விருதை வென்றுள்ளனர்.
பிரான்ஸ் இதழால் உருவாக்கப்பட்ட பாலன் டி’ஓர் விருதை முதன்முதலில் 1956 ஆம் ஆண்டு இங்கிலாந்து வீரரான ஸ்டான்லி மேத்யூஸ் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.