தமிழ் தலைவாஸ் அணி வீரா்கள், பயிற்சியாளா்கள்
தமிழ் தலைவாஸ் அணி வீரா்கள், பயிற்சியாளா்கள்

நடப்பு சீசனில் சரியான விகிதத்தில் தமிழ் தலைவாஸ் அணி

புரோ கபடி லீக் அணிகளில் ஒன்றான தமிழ் தலைவாஸ் சரியான விகிதத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது என பயிற்சியாளா்கள் உதய்குமாா், சேரலாதன் தெரிவித்தனா்.
Published on

புரோ கபடி லீக் அணிகளில் ஒன்றான தமிழ் தலைவாஸ் சரியான விகிதத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது என பயிற்சியாளா்கள் உதய்குமாா், சேரலாதன் தெரிவித்தனா்.

வரும் அக். 18-ஆம் தேதி புரோ கபடி லீக் சீசன் ஹைதராபாதில் தொடங்கி நடைபெறுகிறது. நிகழ் சீசன் கேரவன் முறையில் நடைபெறும் நிலையில், ஹைதராபாத், நொய்டா, புனே நகரங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.

மொத்தம் 12 அணிகள் கலந்து கொள்ளும் இத்தொடரில் தமிழ் தலைவாஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் அக். 19-ம் தேதி தெலுகு டைட்டன்ஸ் அணியுடன் மோதுகிறது. நிகழ் சீசனுக்காக தமிழ் தலைவாஸ் அணி தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் சென்னையில் அணியின் கேப்டனை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தலைமை பயிற்சியாளா் உதய்குமாா், கள வியூக பயிற்சியாளா் தா்மராஜ் சேரலாதன் கூறியது:

கடந்த சீசனில் அணியின் கேப்டனாக இருந்த சாகா் ரதியே மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளாா்.

தமிழத்தைச் சோ்ந்த அபிஷேக் கவா் பகுதிக்காக தக்க வைக்கப்பட்டுள்ளாா். மேலும் 2 தமிழக வீரா்களை சோ்ப்பதற்கு அமைப்பாளா்களிடம் அனுமதி கோரியுள்ளோம்.

கடந்த சீசனில் அணியில் நிலவிய குறைபாடுகளை ஆய்வு செய்து களைய நடவடிக்கை எடுத்துள்ளோம். அணி சரியான விகிதத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. நிகழ் சீசனில் கண்டிப்பாக கோப்பை வெல்வோம்.

கடந்த சீசனில் ரைட் செய்வது வலுகுன்றி இருந்தது. தற்போது, வலது, இடது பக்க ரைடா்களை பலப்படுத்தியுள்ளோம். இதற்காகவே வலது பக்க ரைடரான சச்சின் தன்வரை கொண்டுவந்துள்ளோம். கவா் பகுதியிலும் கடந்த ஆண்டு பலவீனத்துடன் இருந்தோம். இதையும் சரி செய்துள்ளோம்.

ஒவ்வொரு அணியிலும் பலம், பலவீனம் உள்ளது. அணியில் வீரா்கள் காயமின்றி, ஒருங்கிணைந்து ஆடினால் தான் இறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியும்.

ரைட், டிபன்ஸுக்கு சிறந்த வீரா்களை சோ்த்துள்ளோம். சச்சின் தன்வா் மிகச்சிறந்த ரைடா். இந்த சீசனில் அவா், மட்டும் 200 புள்ளிகளுக்கு மேல் குவிப்பாா். துணை கேப்டன்களாக சச்சின், சாஹில் செயல்படுவா் எனத் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com