பாராலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து!

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
கபில் பார்மர் வென்ற பதக்கத்தில் பிரதமர் மோடியின் கையொப்பமிட்ட பின்னர், பதக்கம் வென்றவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி.
கபில் பார்மர் வென்ற பதக்கத்தில் பிரதமர் மோடியின் கையொப்பமிட்ட பின்னர், பதக்கம் வென்றவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி.
Published on
Updated on
1 min read

பாரீஸ் பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற பாராலிம்பிக் தொடரில் இதுவரை இல்லாத அளவாக 29 பதக்கங்களை வென்று வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய இந்திய வீரர், வீராங்கனைகளை பிரதமர் நரேந்திர மோடியை, அவரது இல்லத்தில் வியாழக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுடனான கலந்துரையாடலுக்கு முன்னர் தனித்தனியாக சந்தித்து பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

கபில் பார்மர் வென்ற பதக்கத்தில் பிரதமர் மோடியின் கையொப்பமிட்ட பின்னர், பதக்கம் வென்றவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி.
சீதாராம் யெச்சூரி காலமானார்

இந்தக் கலந்துரையாடலில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் இந்திய பாராலிம்பிக் ஆணையத்தின் தலைவர் தேவேந்திர ஜஜாரியா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பாராலிம்பிக்கில் தொடர்ச்சியாக மகளிருக்கான 10 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் இரண்டு முறை தங்கம் வென்ற அவனி லெகரா, பாரா ஜூடோவில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்று சாதனை படைத்தவரான கபில் பார்மர் ஆகியோர் பிரதமருடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

கபில் பார்மர் வென்ற பதக்கத்தில் பிரதமர் மோடியின் கையொப்பமிட்ட பின்னர், பதக்கம் வென்றவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி.
மகாராஷ்டிர பாஜக கூட்டணிக்குள் மோதல்! மொத்த தொகுதிகள் 288! கேட்பதோ 360!

கபில் பார்மர் தான் வென்ற பதக்கத்தில் பிரதமர் மோடியின் கையொப்பத்தை பெற்றுக்கொண்டார்.

எந்த ஆண்டிலும் இல்லாத வகையில் இந்த பாராலிம்பிக் தொடரில் இந்திய வீரர், வீராங்கனைகளின் திறன் வியக்கத்தக்க வகையில் இருந்தது. 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் உள்பட மொத்தமாக 29 பதக்கங்களை வென்றனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பிக்கில் 84 பேர் கலந்து கொண்டு 19 பதக்கங்களை வென்றிருந்தனர்.

கபில் பார்மர் வென்ற பதக்கத்தில் பிரதமர் மோடியின் கையொப்பமிட்ட பின்னர், பதக்கம் வென்றவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி.
ஃபிரேசர் மெக்கர்க் அதீத திறமைசாலி: ரிக்கி பாண்டிங் புகழாரம்!

மற்றுமொரு சிறப்பாக தடகளப் போட்டியான வில்வித்தையில் ஹர்விந்தர் சிங் தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார்.

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தங்கப்பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.75 லட்சமும், வெள்ளிப்பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.50 லட்சமும், வெண்கலப்பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.30 லட்சமும் வழங்கி கௌரவப்படுத்தியிருந்தார்.

வில்வித்தையில் கலப்பு இரட்டையர் பிரிவில் போட்டியிட்டு வெண்கலப்பதக்கம் வென்ற ஷீத்தல் தேவி, ராகேஷ் குமார் ஆகியோருக்கு தலா ரூ. 22.5 லட்சமும் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com