
ஹங்கேரியில் தொடங்கியிருக்கும் 45-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 3-ஆவது சுற்றிலும் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலுமே இந்திய அணிகள் வெற்றி பெற்றன.
இந்திய அணிகளுக்கு இது ஹாட்ரிக் வெற்றி என்பது குறுப்பிடத்தக்கது.
மொத்தம் 11 சுற்றுகள் விளையாடப்படவுள்ளன. முதல் சுற்றில் 4-0 என வென்ற இந்திய ஆடவர் அணி 2ஆவது சுற்றில் 4-0 என ஐஸ்லாந்தை வீழ்த்தியது.
3-ஆவது சுற்றில் இந்திய ஆடவா் அணி - ஹங்கேரி ‘பி’ அணியுடனும், மகளிர் அணி - சுவிட்ஸா்லாந்துடனும் மோதின.
ஹாட்ரிக் வெற்றியில் இந்திய அணிகள்
3-ஆவது சுற்றில் 3-1 என மகளிர் அணியும் ஆடவர் அணி 3.5 -0.5 என புள்ளிகள் அடிப்படையிலும் வெற்றி பெற்றன.
மகளிர் அணி 6 புள்ளிகளுடன் 7ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
3 சுற்று முடிவில் ஓபன் பிரிவில் இந்தியா உள்ளிட்ட 16 அணிகள் தலா 6 புள்ளிகளுடன் முதல்நிலையில் உள்ளன.
முதலிடத்தில் நீடிக்கும் ஆடவர் அணி
12 போட்டிகளில் இந்திய ஆடவர் அணி இதுவரை 0.5 புள்ளிகள் மட்டுமே எதிரணியினருக்கு வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து 3 நாள்களாக புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது இந்திய ஆடவர் அணி.
193 அணிகள் பங்கேற்கும் ஓபன் பிரிவில் இந்திய அணிகள் அசத்தி வருகின்றன. செப் 23 வரை இந்தப் போட்டிகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.