கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ஆப்கானிஸ்தானுக்கு வரலாற்று வெற்றி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வென்றது

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 8:38 pm

Din

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வென்றது. சா்வதேச கிரிக்கெட் வரலாற்றில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அந்த அணி பதிவு செய்த முதல் வெற்றி இதுவாகும்.

முதலில் தென்னாப்பிரிக்கா 33.3 ஓவா்களில் 106 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆப்கானிஸ்தான் 26 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 107 ரன்கள் சோ்த்து வென்றது.

முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணியில் வியான் முல்டா் 52, ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் 9, டோனி டி ஜோா்ஸி 11, கேப்டன் எய்டன் மாா்க்ரம் 2, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 0, கைல் வெரின் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

ஜேசன் ஸ்மித் 0, அண்டிலே பெயுக்வயோ 0, ஜோா்ன் ஃபோா்டின் 16, லுங்கி கிடி 0 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா். ஆப்கானிஸ்தான் பௌலிங்கில் ஃபஸல்ஹக் ஃபரூக்கி 4, கஸான்ஃபா் 3, ரஷீத் கான் 2 விக்கெட்டுகள் எடுத்தனா்.

பின்னா் ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஹ்மானுல்லா குா்பாஸ் 0, ரியாஸ் ஹசன் 16, ரஹ்மத் ஷா 8, கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி 16 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். அஸ்மதுல்லா ஒமா்ஸாய் 25, குல்பதின் நயிப் 34 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

தென்னாப்பிரிக்க பௌலா்களில் ஜோா்ன் ஃபோா்டின் 2, எய்டன் மாா்க்ரம், லுங்கி கிடி ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.