செஸ் ஒலிம்பியாட்: கடந்தமுறை தங்கம் வென்ற அணியுடன் டிரா செய்த இந்தியா!

செஸ் ஒலிம்பியாட்டின் 9ஆவது சுற்றில் இந்தியாவின் 2 அணிகளும் வெற்றி தோல்வி இல்லாமல் டிராவில் முடிந்தன.
டிரா செய்த இந்திய அணி வீரர்.
டிரா செய்த இந்திய அணி வீரர். படம்: எக்ஸ் / ஃபிடே
Published on
Updated on
1 min read

ஹங்கேரி தலைநகா் புடாபெஸ்டில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 193 அணிகள் பங்கேற்கும் ஓபன் பிரிவில் இந்திய அணிகள் அசத்தி வருகின்றன.

செஸ் ஒலிம்பியாட்டின் 9ஆவது சுற்றில் இந்தியாவின் 2 அணிகளும் வெற்றி தோல்வி இல்லாமல் டிராவில் முடிந்தன.

இந்திய ஆடவர் அணி உஸ்பெகிஸ்தானுடன் மோதியது. இதில் 2-2 என டிராவில் முடிந்தது. கடந்தாண்டு சென்னையில் நடைபெற்ற 44ஆவது செஸ் ஒலிம்பியாட்டில் உஸ்பெகிஸ்தான் அணி தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

மகளிர் பிரிவில் அமெரிக்காவுடன் 2-2 என டிரா செய்தது. 9 சுற்றுகள் முடிவில் இந்தியாவின் மகளிர் அணி 15 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும் ஓபன் பிரிவில் ஆடவர் அணி 17 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.

10ஆவது சுற்றில் ஆடவர் அணி அமெரிக்காவுடனும் மகளிரி பிரிவில் சீனாவுடனும் மோதுகிறது. மீதமிருக்கும் 2 சுற்றுகளில் வெற்றி பெற்றால் இந்திய அணி தங்கத்தை வெல்லாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com